jump to navigation

ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம் -71 December 2, 2007

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
Tags: , ,
trackback

மகுடேஷு நிவிச்ய திக்பதீநாம் பதம் ஏவ ப்ரதிபத்ய தைத்யஹந்து:
பரிரக்ஷஸி பாதுகே பதம் த்வம் க்வநு பித்யேத கரீயஸாம் ப்ரபாவ:

பொருள் – பாதுகையே! இந்திரன் முதலான எட்டுத்திக்கிலும் உள்ள பாலர்களின் தலையில் இருந்தபடி அவர்களின் பதவிகளை நீயே காப்பாற்றுகிறாய். அசுரர்களை வதம் செய்யும் பெரியபெருமாளின் திருவடிகளில் நீ அமர்ந்து கொண்டு, அந்தத் திருவடிகளின் பெருமைகளையும் நீயே காப்பாற்றுகிறாய். உன் போன்ற பெரியோர்கள், அனைவரிடத்திலும் ஒன்று போன்று அல்லவா இருப்பார்கள்?

விளக்கம் – பெரியபெருமாளின் திருவடிகளைக் காப்பதிலிருந்து, பாதுகைகளைத் தலைகளில் ஏற்கும் தேவர்களின் பதவியைக் காப்பதுவரை, பாதுகையானது ஒரே போன்று செயல்படுகிறாள். பெரியவர்கள் எப்போதும் அனைவரிடத்திலும் ஏற்றத்தாழ்வு இல்லாமல் பழகுவது புதுமையா என்ன?

படம் – நம்பெருமாளின் திருவடிகளைக் காப்பதிலிருந்து, தேவர்களின் பதவிகளைக் காப்பாற்றுவதுவரை அனைத்தும் பாதுகைகளின் செயலே (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).

Comments»

No comments yet — be the first.