27. இராமானுச நூற்றந்தாதி(பாசுரங்கள் 53-54) February 24, 2008
Posted by sridharan in இராமானுச100அந்தாதி.trackback
விளக்கவுரை – ஸ்ரீமந் நாராயணனின், “இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களும் கரையேற்றப்பட வேண்டும்”, என்ற ஆணையை ஏற்று, இந்த உலகிற்கு எம்பெருமானார் வந்தார். என்றாலும் இந்த உலகில் உள்ள அனைவரிலும் மிகவும் தாழ்ந்தவனாக உள்ளை என்னை அடிமை கொள்ளவே வந்தார். நான் உள்ள இடம் தேடி வந்த கற்பக மரம் போன்று இவர் உள்ளார். அனைத்து உயர்ந்த புருஷார்த்தங்களையும் அளிக்கவல்ல கற்பகம் போன்று உள்ளார். அனைத்து சாஸ்திரங்களையும் அறிந்தவர், பெரியவன் – சிறியவன் என்ற ஏற்றத்தாழ்வு பாராமல், அனைவருக்கும் சமமாக உள்ள தன்மை கொண்டவர் ஆவார். இப்படிப்பட்ட எம்பெருமானார் உபதேசித்தது என்னவென்றால் – உபதேசம் செய்வதற்கு மிகவும் கடினமான கருத்தாக உள்ள, “அனைத்து ஆத்மாக்கள், ஆத்மாக்கள் உள்ள அனைத்து லோகங்கள் ஆகிய அனைத்தும் – அனைவரிலும் மிகவும் உயர்ந்தவனாக உள்ள ஸ்ரீமந் நாராயணனுக்கே அடிமை”, என்று நிரூபித்தார். இத்தகைய உயர்ந்த கருத்தை இந்த உலகம் முழுவதிலும் வெளிப்படுத்த, இந்த உலகம் பிழைக்கும்படி, தானே வந்து அவதரித்தார். ஒரு சிலருக்கு, ஒரு சில காலம் மட்டுமே உபதேசம் செய்தார் என்று இல்லாமல், இந்த உலகினருக்கு எப்போதும் உள்ளபடி ஸ்ரீபாஷ்யம் போன்றவற்றை நிலைநிறுத்தினார்.
54. நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன * நாரணனைக் காட்டிய வேதம் களிப்புற்றது * தென்குருகை வள்ளல் வாட்டம் இலா வண்தமிழ் மறை வாழ்ந்தது மண்ணுலகில் ஈட்டிய சீலத்து * இராமானுசன் தன் இயல்வு கண்டே.விளக்கவுரை – அறியாமையின் இடமாக உள்ள இந்தப் பூமியில், தான் பெற்றிருந்த பரமபதத்தை விடுத்து, இந்த உலகினரின் சிறுமையைக் பாராமல் எம்பெருமானார் அவதரித்தார். இவரது ஸ்வபாவம் மற்றும் உயர்ந்த குணங்களைக் கண்டு, சூரியனைக் கண்ட இருள் விலகுவது போன்று, வைதிகம் அற்ற மதங்கள் அனைத்தும் நிர்மூலமாகச் சென்றன. இவரது அவதாரம் ஏற்பட்ட பின்னர் ஸர்வேச்வரனாகிய நாராயணனப் போற்றும் வேதங்கள் அனைத்தும், “நமக்கு இனி குறையில்லை”, என்று கர்வம் அடைந்தன. மிகவும் உயர்ந்த இடமும், நம்மாழ்வாரின் அவதார இடமும் ஆகிய ஆழ்வார்திருநகரியில் உதித்த நம்மாழ்வார் அருளிச் செய்ததும், அனைத்து புருஷார்த்தங்களையும் அளிக்கவல்லதும், தமிழ் வேதமும் ஆகிய திருவாய்மொழி எந்தக் குறையும் இன்றி வளர்ந்தது.
Comments»
No comments yet — be the first.