jump to navigation

ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்-6 September 28, 2007

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback

தத் தே முகுந்த மணி பாதுகயோ: நிவேசாத்
வல்மீக ஸம்பவகிரா ஸமதாம் மம உக்தி:
கங்கா ப்ரவாஹ பதி தஸ்ய கியாநிவ ஸ்யாத்
ரத்யோதகஸ்ய யமுநா ஸலிலாத் விசேஷ:

பொருள் – என்னுடைய இந்த ஸ்லோகங்களை (சொற்களை) நான், உயர்ந்த இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட முகுந்தனான க்ருஷ்ணனின் பாதுகைகள் மீது வைக்கிறேன் . இதனால் நிகழ்வது என்ன? இந்தச் ஸ்லோகங்கள், வால்மீகியின் இராமாயணத்திற்கு நிகராக மாறிவிடுகின்றன. மழைபெய்து வீதியில் ஓடும் நீர் மற்றும் யமுனை நதியின் நீர் ஆகிய இரண்டும் கங்கை நதியில் விழும்போது இரண்டிற்கும் வித்தியாசம் ஏதும் இல்லை அல்லவா?

விளக்கம் – இங்கு ஒரு கேள்வி எழக்கூடும் . ஸ்லோகம் ஐந்தில், தன்னைத் தாழ்ந்தவன் என்று கூறுகிறார். தாழ்ந்தவனின் சொற்களில் பலன் ஏதும் எற்படுமா என்பதே அந்தக் கேள்வியாகும். இதற்கு விடை தருகிறார் . தான் தாழ்ந்தவனாக இருந்தாலும் தனது சொற்கள் ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகள் பற்றி உள்ளதால், தாமாகவே பலன் பெற்றுவிடும் என்று கூறுகிறார். இங்கு தெருவில் ஓடும் நீர் என்பதை இவரது சொற்களாகவும், யமுனையின் புனிதமான நீர் வால்மீகியின் சொற்களாகவும், கங்கை நீர் என்பது இரண்டையும் புனிதமாக்கும் பாதுகைகள் என்றும் கொள்ளலாம். மேலும் இதனை பாராயணம் செய்தால் இராமாயணம் போன்று பலன் அளிக்கும் என்றும் கருதலாம்.

படம் – க்ருஷ்ணனின் அழகான திருவடிகள்.

Advertisements

Comments»

1. தி.ரகுவீரதயாள் - September 28, 2007

ஸ்வாமின்,
எப்படித் தான் தேடித்தேடிப் பொருத்தமான படங்களாக சேர்க்கிறீர்களோ! ஸஹஸ்ரம் மகுடம் என்றால் தேவரீரது blog அதை மிளிரவைக்கும் நவரத்தினமாக அமையப்போவது உறுதி. பூர்த்தியானபின் எப்படி அருமையாக இருக்கப் போகிறது என இப்போதே கற்பனை செய்து ஆனந்தமடைந்து கொண்டிருக்கிறேன். baraha உபயோகப்படுத்தி மூலமும் தேவநாகரியில் இணைத்தால் சிறப்பாக இருக்கும்.
தாஸன்
ரகு

2. Narasimhan Krishnamachari - September 30, 2007

Dear SrI SrIdharan svAmi:

This is superb kai’nkaryam to all of us. I have one suggestion, if it is possible to implement. If you can use the notation in the Tamizh version of the Sloka-s to indicate the correct pronunciation of the different letters, it will be very useful for some to learn the Sloka-s with the correct samskRt pronunciation. This is just a thought.

-dAsan Krishnamachari

3. sridharan - September 30, 2007

Swamin,

Adiyen is working on this. While posting, the software does not have the provision for suffix numbering. Adiyen will definitely find a workaround for this soon.

Adiyen Dasan
Sridharan

4. raghunathan.r - October 1, 2007

dear sri sridharan swami,

yes when this is done it would be a great crown on your head only few has the blessings to wear them, and god has choosen you, may he give all the strength and courage. my heartfelt prayer to sri lakshmi narasimhan.

adieyn dasan

5. Vasu - October 7, 2007

Adiyen vasu from Sri vaishnava Sri srirangam .This blog is escellent with apt pictures appropriate to the text content .Great attempt.Request you to kindly include http://www.srivaishnavasri.com also on your blog roll, Adiyen Vasu


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: