jump to navigation

ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம் -8 September 30, 2007

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback

அச்ரத்ததானநமபி நந்வதுநா ஸ்வகீயே
ஸ்தோத்ரே நியோஜயஸி மாம் மணிபாதுகே த்வம்
தேவ: ப்ரமாணம் இஹ ரங்கபதி: ததாத்வே
தஸ்ய ஏவ தேவி பதபங்கஜயோ: யதா த்வம்

பொருள் – உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! நான் எந்தவிதமான ச்ரத்தையும் இல்லாதவன் ஆவேன் . ஆயினும் உன்னைக் குறித்து ஸ்லோகங்கள் இயற்றும்படி நீ என்னைப் பணிக்கிறாய். ஸ்ரீரங்கநாதனின் தாமரை போன்ற திருவடிகளுக்கு நீ எவ்விதம் உள்ளாய் என்று நான் அறியவில்லை. அதனை ஸ்ரீரங்கநாதனே எனக்குக் கூறுவானாக!

விளக்கம் – ஒரு பொருளின் தன்மை என்ன, உயர்வு என்ன என்பதை அந்தப் பொருளின் உரிமையாளர் கூறினால் அல்லவா மற்றவர்களுக்குப் புரியும்? இது போன்று, இங்கு பாதுகையின் தன்மை என்ன என்பதை, அதனை அன்றாடம் தனது திருவடிகளில் அணிந்துள்ள ஸ்ரீரங்கநாதனே கூறவேண்டும் என்று வேண்டுகிறார்.

படம் – திருவரங்கத்தில் கண்வளரும் அழகியமணவாளனின் திருவடி நிலைகள். (படம் உதவி: ஸ்ரீமாந் முரளி பட்டர், திருவரங்கம்)

Advertisements

Comments»

1. தி.ரகுவீரதயாள் - September 30, 2007

கடுகுநின் பரிவி லெண்ணா வடியனென் மதிபு குந்துன்
படியினின் துதியு திக்கும் பரியருள் புரியப் பாதூ!
நடையரங் கனத டிப்பூ நடையினீ நடத்து மாறுன்
படியிதொன் றெனவ ரங்க பதியிவ னொருவன் சான்றே.

“திருப்பாதுகாமாலை ஸ்ரீ கேசவ ஐயங்கார் இயற்றியது


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: