jump to navigation

எம்பெருமானாரின் கீதா பாஷ்யம் – 7 October 27, 2007

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback

2-12

முதலில் நீ ஆத்மாவின் தன்மையை அறிவாயாக. ஸர்வேச்வரனாகிய நான், நிரந்தரமாக எப்போதும் உள்ள நான், இல்லாமல் இருந்தேன் என்பதே கிடையாது. நான் எப்போதும் உள்ளேன். எனது கட்டளைக்குட்பட்டு இயங்கும் ஆத்மாக்களாகிய நீங்கள் இல்லாமல் இருந்ததே கிடையாது. நீங்களும் எப்போதும் உள்ளீர்கள். நாம் அனைவரும் (நீ, நான்) எதிர்காலத்தில் இல்லாமல் இருக்கப் போகிறோம் என்று பேச்சுக்கு இடமே இல்லை, நாம் அப்போதும் இருப்போம். ஸர்வேச்வரனாகிய நான் நிரந்தரமானவன் என்பதிலும், அழியாமல் எப்போதும் உள்ளவன் என்பதிலும் எவ்வாறு சந்தேகம் கிடையாதோ அது போன்று, ஆத்மாக்களாகிய நீங்களும் நிரந்தரமானவர்களே ஆவீர்கள்.

மேலே கூறியவற்றில் இருந்து – அனைத்தையும் ஆளும் ஸர்வேச்வரனுக்கும் மற்ற ஆத்மாக்களுக்கும் உள்ள வித்தியாசம், ஒவ்வொரு ஆத்மாக்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் ஆகியவற்றை உணரலாம். இதனைக் க்ருஷ்ணன் தெளிவாகவே கூறுகிறான். அர்ஜுனனுக்கு ஆத்மா நிரந்தரம் என்பதும், இத்தைகைய ஆத்மாக்களுக்கு இடையில் பேதம் உண்டு என்பதும், அவனது அறியாமையால் மறைக்கப்பட்டிருந்தது. அதனை நீக்கவே “நான், நீ, இவர்கள், நாம்”, போன்ற பதங்கள் மூலம் நிரந்தரத் தன்மையை அறிவுறுத்தினான்.

பாஸ்கர மதத்தின்படி, ஜீவாத்மாக்களுக்கு இடையே உள்ள பேதங்கள் (பல ஜீவாத்மாக்கள் உள்ளதாகக் தோன்றுதல்) , உபாதி என்னும் ஒருவித மயக்கம் காரணமாகவே தோன்றுகிறது. ஆனால் இவர்கள் கருத்தின்படி இந்த வேறுபாடுகள் உண்மையில் கிடையாது என்பதாகும். இங்கு க்ருஷ்ணன் ஆத்ம பேதங்கள் உண்டு என்ற உண்மையை உரைக்கிறான். ஆகவே இந்த கீதோபதேசம் இவர்களுக்குப் (பாஸ்கர மதத்தைச் சார்ந்தவர்கள்) பொருந்தாது. மேலும் க்ருஷ்ணன் கூறிய ஆத்ம பேதங்கள் ஸ்வேதாஸ்வதார உபநிஷத் [6-13] , கட உபநிஷத் [5-13] – நித்யோ நித்யாநாம் சேதந: சேதநாநாம் ஏகோ பஹுநாம் யோ விததாதிகாமாந் – என்றும் உள்ள ஆத்மாக்களுக்கு இடையே என்றும் உள்ள அந்த ஆத்மா, மற்ற ஆத்மாக்களின் விருப்பங்களை நிறைவேற்றுகிறது – என்று கூறியது.

இதன் மூலம் உணர்த்தப்படுவது – பல எண்ணிக்கையில் உள்ள ஆத்மாக்களுக்கு இடையே இருக்கும் இந்தப் பரமாத்மா- அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுகிறான் என்பதாகும்.

…தொடரும்

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: