jump to navigation

ஸ்ரீ ராமானுஜ கீதா பாஷ்யம் 10 October 30, 2007

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback

அடுத்து, அத்வைதத்தில் ஆத்மா ஒன்றே என உணரப்படுகிறது. இந்த ஞானம் ஆழமாக ஏற்பட்ட பின்னர், மற்றதெல்லாம் மாயை (பொய்யான தோற்றம்) என்ற ஞானம் உண்டாகிவிடும். அதன் பின்னரும் ஆத்மபேதம் (பல ஆத்மாக்கள்) குறித்த மயக்கம் (குழப்ப நிலை) ஏற்படும் வாய்ப்பு இல்லை அல்லவா?

இதற்கு அத்வைதிகள் கூறும் வாதம் – கண்களில் திமிரா என்ற சதை (cataract எனலாம்) வளர்ந்த ஒருவனுக்கு, சந்த்ரன் இரண்டாகத் தெரிகிறது. அவனுக்கு சந்த்ரன் ஒன்றே என்னும் ஞானம் உள்ளபோதிலும், தனது கண்ணில் இவ்விதம் தெரிவதால், தனது நண்பன் மூலமாக சந்த்ரன் ஒன்றே என அறிகிறான். தன்னுடைய கண்ணில் உள்ள சதை காரணமாக அவனது மெய்யான அறிவு மறைக்கப்படுகிறது. இது போன்ற தவறான அறிவு தொடர்ந்து இருந்தாலும், அதனால் சந்த்ரன் ஒன்றுதான் என்னும் உண்மை மறுக்க இயலாது அல்லவா? இது அத்வைதிகளின் வாதமாகும்.

(அத்வைதிகளை நோக்கி) உங்களது வாதத்தின்படி ஆத்மா ஒன்று என்னும் உண்மையான அறிவு உண்டாகும்போது – ஆத்மா பல உண்டு – என்ற மயக்க நிலை, இந்த மயக்க நிலை காரணமாக உண்டாகும் தவறான அறிவு ஆகியவை விலகிவிடும். இப்படி வைத்துக்கொண்டால், ஸர்வேச்வரன் தொடங்கி இன்று வரை உள்ள ஆசான்கள் உபதேசம் செய்வதே பொருந்தாது. காரணம், அவர்களுக்கு ஆத்மா ஒன்று என்ற அறிவு உண்டான பின்னர், உபதேசம் செய்வது பொருந்தாது. இதற்கு மறுப்பாக நீங்கள் – அப்படியல்ல, அவர்களுக்கு ஆத்மபேத மயக்கம் தொடர்ந்து உள்ளது, அந்த மயக்கம் முற்றிலும் நீங்காத காரணத்தினால்தான் உபதேசம் செய்கிறார்கள் – எனலாம்.

இவ்வாறு கொண்டால், அவர்கள் முழுமையான ஞானம் பெறாமலேயே உபதேசம் செய்கிறார்கள் என்றாகிவிடும். அப்படி என்றால் அவர்களுக்கு உபதேசம் செய்யும் தகுதியே இல்லை என்று அல்லவோ ஆகிறது?

…தொடரும்

Advertisements

Comments»

1. Rajesh narayanan - June 23, 2009

Hai
iam intersted bhasyam
can you help me
bhasyam tamil expalination any site is there or book
please tell me
regards
http://narasimmah.bogspot.com


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: