jump to navigation

ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம் – 39 October 31, 2007

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback

யோஷித்பூத த்ருஷந்தி அபோட சகட ஸ்தேமாநி வைமாநிக
ஸ்ரோதஸ்விநீ உபலம்பநாநி பஸித் உதஞ்சத் பரீக்ஷிந்தி ச
தூத்யாதிஷ்வபி துர்வசாநி பதயோ: க்ருத்யாநி மத்வேவ யத்
தத் தே தத் ப்ரணயம் தத் ஏவ சரணத்ராணம் வ்ருணே ரங்கிண:

பொருள் – நம்பெருமாளின் திருவடிகள் எப்படிப்பட்டவை – கல்லாகக் கிடந்த அகலிகையைப் பெண்ணாக மாற்றியவை; பலம் வாய்ந்த சகடாசுரனை உதைத்து அழித்தவை; த்ரிவிக்ரம அவதாரத்தில் வானம் வரை அளந்து, கங்கையை உண்டாக்கியவை; சாம்பலில் இருந்து பரீக்ஷத் அரசனை உண்டாக்கியவை; பாண்டவர்களுக்காகத் தூது சென்றவை ஆகும். இப்படிப்பட்ட பல குணங்களை வெளிப்படுத்திய திருவடிகளுடன் எப்போதும் பாதுகைகள் சினேகத்துடன் பிரியாமல் உள்ளன. இப்படியாக நம்பொருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! எனக்கு மேன்மை ஏற்பட அருள்வாயாக.

விளக்கம் – ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு திருக்கல்யாண குணம் வெளிப்படுவதைக் காணலாம். இதில் பாண்டவர்களுக்காகத் தூது சென்ற ஸௌலப்யம் மிகவும் போற்றத்தக்கது. அது போன்று அந்தத் திருவடிகளைத் தன்னிடம் அழைத்து வந்து, தனக்கு மேன்மை அளிக்கவேண்டும் என்றார்.

படம் – திருவடிகளை அனைவருக்கும் காண்பித்து நிற்கும் நம்பெருமாள் (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: