jump to navigation

14. எம்பெருமானாரின் கீதா பாஷ்யம் November 3, 2007

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback
2.15 யம் ஹி ந வ்யதயந்தி ஏதே புருஷம்
ஸம துக்க ஸுகம் தீரம் ஸ: அம்ருதத்வாய கல்பதே

பாஷ்யம்

இப்படியாக சுகம் போன்று துக்கமும் விலக்க இயலாதது என்று அதனையும் எதிர் கொள்பவனை, தனது பிறப்பு தர்மத்திற்கு ஏற்றது போன்று யுத்தம் செய்வது முதலான செயல்களைச் சரியாகச் செய்து வருபவனை, இப்படிப்பட்ட செயல்களால் உண்டாகும் பலனை எதிர்பாராமல் செயலாற்றுபவனை – போர்க்களம் முதலானவற்றில் உண்டாகும் அம்புபடுதல் முதலானவை துயரப்படுத்துதல் என்பது கிடையாது. அவன் மட்டுமே மோக்ஷம் முதலான உயர்ந்த பதவிகளை அடைய இயலும். உன்னைப் போன்று துன்பங்களைப் பொறுக்க இயலாதவனுக்கு மோக்ஷம் முதலானவை கிட்டாது. மோக்ஷம் பெறுவதில் விருப்பம் உள்ளவன், ஆத்மா அழியாத காரணத்தினால், இங்கு உள்ளபோது பொறுமையை கடைபிடித்துச் செயலாற்ற வேண்டும்.

ஆத்மா என்பது என்றும் அழியாமல் உள்ளதாகும்; இந்த உடல் என்பது கண்டிப்பாக அழியக்கூடியதாகும் – ஆகவே இரண்டைக் குறித்தும் வருத்தம் கொள்ளுதல் தேவையற்றது. க்ருஷ்ணன்[2-11] – கதாஸுந் அகதாஸுந் ந அநுயோசந்தி பண்டிதா – ஞானம் உள்ளவர்கள் இறந்தவர்களுக்காக அல்லது உயிருடன் உள்ளவர்களுக்காக வருத்தம் கொள்வதில்லை – என்று முன்பே கூறினான். இதனை இங்கு மீண்டும் கூறுகிறான்.

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: