jump to navigation

16. எம்பெருமானாரின் கீதா பாஷ்யம் November 5, 2007

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback

ஆக அழியக்கூடிய தன்மை காரணமாக உடல் என்பது அஸத் என்றும், அழியாமல் உள்ளதால் ஆத்மா ஸத் என்றும் கூறப்பட்டது. இந்த ச்லோகத்தின் பொருளாக – இல்லாத ஒரு பொருள் உண்டாவதில்லை, இருக்கின்ற பொருள் அழிவதில்லை – என்று சிலர் கூறுகிறார்கள் . இந்த ஸத்கார்ய வாதத்தை (ஸாங்கியர்களும் மற்ற சிலரும்) ஏற்க இயலாது – காரணம் அந்த வாதத்திற்கும் இந்த ச்லோகத்தின் பொருளுக்கும் தொடர்பே கிடையாது.

இங்கு அர்ஜுனன், உடல் மற்றும் ஆத்மா ஆகியவற்றின் உண்மை புரியாமல் மயங்கி நிற்கிறான். அவனுடைய மயக்கத்தை நீக்குவதற்காகவே க்ருஷ்ணன் இங்கு அழிகின்ற உடல், அழியாத ஆத்மா என்று விளக்கினான். இந்த உபதேசம் (2-11) – கதாஸூந் அகதாஸூம்ஸ்ச நாநுசோசந்தி பண்டிதா – உடலை குறித்தும் ஆத்மாவைக் குறித்தும் அறிவாளிகள் வருந்துவதில்லை – என்று தொடங்குவதன் மூலம் இதனை உணரலாம்.

மேலும் (2-17) – அவிநாசிது தத் வித்தி (ஆத்மா அழிவற்றது), (2-18) – அந்தவந்த இமே தேஹா (உடல் அழியக்கூடியது) – என்று கூறி முடிப்பதன் மூலம் இங்கு கூறப்பட்ட பொருளையே க்ருஷ்ணன் கூறுகிறானே தவிர ஸத்கார்ய வாதம் முதலானவற்றை அல்ல.

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: