jump to navigation

18. எம்பெருமானாரின் கீதா பாஷ்யம் November 7, 2007

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback
2-18 அந்தவந்த இமே தேஹா நித்ய: உக்தா: சரீரிண:
அநாசிந: அப்ரமேயஸ்ய தஸ்மாத் யுத்யஸ்வ பாரத

பாஷ்யம் – திஹ என்ற பதம் வளர்தல் என்ற பொருளை அளிக்கிறது. ஆகவே திஹ உபசயே என்பது உடல் வளர்கிறது , மாறுபாடை அடைகிறது என்று பொருள் தருகிறது. இப்படியாக வளரும் இந்த உடல்கள் அழியக்கூடியவை – இயற்கையாக இவற்றுக்கு அழிவு உண்டு. குடம் போன்றவை உருவாக்கப்பட்டு, அழிவதை நாம் காண்கிறோம் அல்லவா? ஆத்மாவிற்கு உடலாக இருக்கும் இந்த தேகங்கள் அனைத்தும், ஆத்மா தனது கர்மங்களை அனுபவிக்க ஏற்பட்டவையே ஆகும். இதனை ப்ருஹத் உபனிஷத் (4-4-5) – புண்ய: புண்யேந – நல்ல செயல்கள் மூலம் நல்ல உடல் கிடைக்கிறது – என்றது. கர்மங்கள் செய்து முடிக்கப்பட்டவுடன், இந்த உடலானது அழிந்துவிடும். ஆனால் ஆத்மா அழியாமல் உள்ளது. எப்படி? காரணம் அதனை எளிதில் அறிய இயலாது. ஆத்மா அனைத்தையும் அறியக்கூடியது என்று மட்டுமே உணர இயலும். இதனைக் கண்ணன் (13-1) – ஏதத்யோ வேத்தி தம் ப்ராஹு: க்ஷேத்ரஜ்ஞ இதி தத் வித: – இந்த உடல் க்ஷேத்ரம் எனப்படும்; இப்படி உணரும் ஜீவனை க்ஷேத்ரஜ்ஞன் என்பர் – என்று கூற உள்ளான்.

மேலும் (உடலுக்கு உள்ளது போன்று) ஆத்மாவிற்கு உறுப்புகள் கிடையாது. “இந்த உடலை நான் அறிகிறேன்” என்று ஒருவன் கூறும்போது, அவ்வாறு கூறும் ஆத்மா அந்த உடலைவிட்டுத் தனித்து இருந்தால் மட்டுமே கூற இயலும் அல்லவா? மேலும் ஆத்மா பல உள்ளதாகக் கொண்டால் (ஒவ்வொரு உறுப்பிலும் ஒவ்வொரு ஆத்மா உள்ளதாக), “நாங்கள் அறிகிறோம்”, என்று அல்லவா கூறவேண்டும்? ஆகவே ஆத்மா ஒன்று என்பதும், அது அழியாமல் உள்ளது என்பதும் அறியலாம்.

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: