jump to navigation

22. எம்பெருமானாரின் கீதா பாஷ்யம் November 11, 2007

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback
2-21 வேத அவிநாசிநம் நித்யம் ய ஏநம் அஜம் அவ்யயம்
கதம் ஸ புருஷ: பார்த்த கம் காதயதி ஹந்தி கம்

பாஷ்யம் – எந்த ஒருவன் ஆத்மா அழிவற்றது என்று அறிகிறானோ , என்றும் உள்ளது என்று அறிகிறானோ, பிறப்பற்றது என்று அறிகிறானோ, மாற்றம் அடையாதது என்று அறிகிறானோ – அந்த மனிதன் எந்த ஆத்மாவைக் கொல்ல முயல்வான்? அவன் – தேவர்கள், மனிதர்கள் , விலங்குகள், தாவரங்கள் என எவற்றின் ஆத்மாவைக் கொல்ல முயற்சிப்பான்? யாரைக் கொல்வான் ? அவன் யார் மூலம் இவற்றைக் கொல்ல முயற்சிப்பான்? இங்கு உணர்த்தப்படுவது – “நான் இவர்கள் இறப்பதற்குக் காரணம், நான் கொல்கிறேன்” – என்ற சோகத்திற்குக் காரணம் ஆத்மாவைப் பற்றிய உண்மையான அறிவு இல்லாமல் உள்ளதால் ஆகும்.

இங்கு அர்ஜுனன் ஒரு கேள்வி எழுப்பக் கூடும் – ஆத்மாவை உடலில் இருந்து பிரிப்பது மட்டுமே யுத்தத்தில் நிகழ்கிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த உடல்கள் பலவகையான சுகங்களை அனுபவிப்பதற்காக உள்ளவை அல்லவா? அப்படிப்பட்ட உடல்கள் அழிவதன் மூலம் எனக்கு வருத்தம் உண்டாகும் அல்லவா? – இதற்கு க்ருஷ்ணன் அடுத்த ச்லோகத்தில் விடை தருகிறான்.

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: