jump to navigation

ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம் – 51 November 12, 2007

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback

பலி மதந விஹாராத் வர்த்தமாநஸ்ய விஷ்ணோ:
அகிலம் அதிபதத்பி: விக்ரமை: அப்ரமேய:
அவதிம் அநதிகச்சந் பாபராசி: மதீய:
ஸமஜநி பதரக்ஷே ஸாவதி: த்வத் மஹிம்நா

பொருள் – பகவானின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! மஹாபலியின் கர்வத்தை அடக்குவதற்காக ஒரு விளையாட்டைச் செய்வது போன்று, எம்பெருமான் மிகவும் சர்வசாதாரணமாக ஓங்கி வளர்ந்தான். அப்போது அவனுடைய திருவடிகளால் அனைத்து உலகங்களையும் அளக்க முயன்றான். ஆனால் அவனால் இயலவில்லை. இதன் காரணம் – எல்லையற்ற பெருங்கூட்டமாக எனது பாவங்கள் இந்த உலகில் இருந்தன; இவற்றை அவனது திருவடிகளால் அளக்க இயலாதபோது, உனது வலிமையால் அவை அழிந்துவிட்டன. இதன் பின்னர் பகவானால் அனைத்தையும் அளக்க இயன்றது.

விளக்கம் – இங்கு அனைத்து அண்டங்களையும்விட தனது பாவங்களின் பரப்பளவு அதிகம் என்கிறார். அதனை த்ரிவிக்ரமனால் அளக்க இயலவில்லை. அப்போது பாதுகைகள் தனது தலையில் பட்டன(கடந்த ச்லோகமும் காண்க). அதன் மூலம் தனது பாவங்கள் அழிந்தன என்றும், எம்பெருமானால் அதன் பின்னரே அளக்க இயன்றது என்றும் கூறுகிறார். திருவடிகளைவிட பாதுகைகளுக்கு உள்ள மேன்மை மீண்டும் கூறப்பட்டது.

படம் – அனைத்தையும் அளந்த த்ரிவிக்ரமன் (நன்றி – இஸ்கான்)

Comments»

No comments yet — be the first.

Leave a comment