35. எம்பெருமானாரின் கீதா பாஷ்யம் November 24, 2007
Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.trackback 2-35 பயாத் ரணாத் உபரதம் மம்ஸ்யந்தே த்வாம் மஹாரதா: யேஷாம் ச த்வம் பஹுமத: பூத்வா யாஸ்யஸி லாகவம்
பாஷ்யம்
கர்ணன், துரியோதனன் போன்ற சிறந்த வீரர்கள் இதுவரை உன்னைச் சுத்தமான வீரன் என்று எண்ணி, அதிக மதிப்பு வைத்திருந்தனர். இப்போது நீ, தொடங்கிய யுத்தத்தில் இருந்து பின்வாங்கினால், அவர்கள் உன்னை அலட்சியப்படுத்தி விடுவார்கள்; உன்னை எளிதில் வென்று விடலாம் என்றும் எண்ணுவார்கள். மேலும் அவர்கள், நீ பயம் காரணமாக பின்வாங்குவதாகக் கூறுவார்கள். இவர்கள் இவ்வாறு நினைக்கக் காரணம் – சிறந்த வீரன் ஒருவன் தனக்கு முன்பாக உள்ள எதிரிகளைக் கண்டு அன்பு காரணமாகப் பின்வாங்க மாட்டான்; அது பயம் காரணமாக மட்டுமே நிகழும்.
Advertisements
Comments»
No comments yet — be the first.