jump to navigation

ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம் – 67 November 28, 2007

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback

இஹ யே பவதீம் பஜந்தி பக்த்யா க்ருதிந: கேசவ பாதுகே நியுக்தா:
கத்யாம்ப திரோஹிதம் த்ருதீயம் நயநம் த்ரீணி முகாநி வா கிம் ஏஷாம்

பொருள் – அழகான சுருண்ட தலைமுடி உடைய க்ருஷ்ணனின் பாதுகையே! இந்த உலகில் மிகுந்த புண்ணியம் செய்தவர்கள், உன்னைப் பக்தியுடன் வணங்கியபடி உள்ளனர். இவர்களுடைய மூன்றாவது கண், மற்ற மூன்று முகங்கள் மறைந்து உள்ளதோ?

விளக்கம் – பாதுகையை ஆராதிப்பவர்களுக்கு சிவன் என்ற பதவி, ப்ரம்மன் என்ற பதவி தேடி வரும். மூன்று கண்கள் என்பது சிவனையும், நான்கு முகங்கள் என்பது ப்ரம்மனையும் குறிக்கும். மூன்றாவது கண் என்றும், வெளியில் தெரிவது தவிர மூன்று தலைகள் என்பதும் இப்பதவிகளைக் குறிக்கும். அந்தப் பதவிகளை அடைய எந்த அளவு உயர்ந்திருக்க வேண்டுமோ, அதே அளவு உயர்ந்தால் மட்டுமே பாதுகை மீது பக்தி உண்டாகும் என்று கருத்து.

படம் – அழகான உடைகள் அணிந்த கண்ணனும் ராதையும். அவர்கள் திருமுன்பாக, அழகிய தங்கப் பாதுகைகள்.

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: