jump to navigation

40- எம்பெருமானாரின் கீதா பாஷ்யம் November 29, 2007

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback
2-41 ந இஹ அபிக்ரமநாச: அஸ்தி ப்ரத்யவாய: ந வித்யதே
ஸ்வல்பம் அபி அஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹத: பயாத்

பாஷ்யம் – கர்மயோகத்தில், தொடக்கத்திற்கு எந்தவிதமான இழப்பும் ஏற்படுவதில்லை – அதாவது தொடங்கி நடந்த பகுதிகளுக்கு இழப்பு இல்லை. நடந்த பகுதிகளின் (அபிக்ரம) இழப்பு என்பது, அந்தப் பகுதிகள் மூலம் ஏற்படும் பலன் கிட்டாமை என்பதாகும். இது இல்லை – அதாவது, நடந்த பகுதிகள் மட்டும் அதன் பலனை அடைந்தே தீரும் என்பது ஆகும். தொடங்கப்பட்ட கர்மம், இடையில் எதோ ஒரு தடங்கல் காரணமாக நின்று விட்டாலும், அதற்குரிய பலன்கள் தடைபடுவதில்லை. இம்மாதிரி தடையேற்பட்டதால் பாவம் ஏதும் சேர்வதும் இல்லை. சிறிய அளவில் கர்மயோகம் இயற்றப்பட்டாலும் மாபெரும் பயத்தை நீக்கி விடும் – மாபெரும் பயம் என்பது ஸம்ஸார பந்தப்பிடிப்பு ஆகும்.

இதே கருத்து பின்னாலும் (6-40) – பார்த்த ந ஏவ இஹ நாமுத்ர விநாசஸ் தஸ்ய வித்யதே – அவனுக்கு இங்கும் அங்கும் அழிவு இல்லை – என்று கூறப்படும். ஆனால் பலனை எதிர்பார்த்து இயற்றப்படும் கர்மங்கள் அனைத்தும் நடுவில் நின்றால், உரிய பலன்களை அளிக்காது; மேலும் பாவமும் சேர்ந்து விடுகிறது.

இப்போது க்ருஷ்ணன் – மோக்ஷம் பெற மட்டுமே புத்தியைத் திருப்பிச் செய்யப்படும் செயல்கள் மற்றும் பலனை எதிர்பார்த்துச் செய்யப்படும் செயல்கள் ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாட்டைக் கூறுகிறான்.

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: