jump to navigation

ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம் -75 December 6, 2007

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback

அபஹாய ஸிதாஸிதாந் உபாயாந்
அரவிந்த ஈக்ஷண பாதுகே மஹாந்த:
த்வத் அநந்யதயா பஜந்தி வ்ருத்திம்
த்வத் அஸாதாரண போக ஸாபிலாஷா:

பொருள் – தாமரை போன்று அழகாகவும் சிவந்தும் உள்ள கண்களைக் கொண்ட பெரியபெருமாளின் பாதுகையே! கர்மயோகம் போன்ற உபாயங்கள், மோக்ஷம் முதலான பலன்களை அளிக்கவல்லதா என்ற ஐயம் உள்ளது. இதனால் பெரியவர்கள் இவற்றைக் கைவிடுகின்றனர். உனக்கு மட்டுமே அடிமையாக உள்ள சுகம் அனுபவித்து, உனது கைங்கர்யத்தில் மட்டுமே ஆசை கொண்டு, வேறு யாரையும் நினைக்காமல் உள்ள வைராக்யம் பெறுகின்றனர்.

விளக்கம் – எம்பெருமானை அடைய ஆசார்யனே வழி என்பதை இங்கே கூறுகிறார். பாதுகைகள் ஆசார்யனையே குறிக்கும் என்பதால், பாதுகையை அண்டி, அதற்குக் கைங்கர்யம் செய்யும்போது, மோக்ஷ உபாயம் தானே ஸித்திக்கிறது என்று கருத்து.

படம் – எம்பெருமானை அடைய எளிதான மார்க்கத்தைத் தனது திருவாய்மொழி மூலம் காண்பித்த நம்மாழ்வார், பெரியகோயிலில் சேவை ஸாதிக்கிறபடி (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: