jump to navigation

ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம் -81 December 10, 2007

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback

த்வயைவ நித்யம் மணிபாதரக்ஷே
ராஜந்வதீ ஸ்ருஷ்டி: இயம் ப்ரஜாநாம்
ஸ்த்ரீ ராஜ்ய தோஷ ப்ரசமாய நூநம்
நிர்த்திச்யஸே நாத விசேஷணேந

பொருள் – உயர்ந்த கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! இந்த உலகமானது உன் மூலம் நல்ல ஓர் ஆட்சியாளனைக் கொண்டுள்ளது. ஆனால் நீ இவ்வாறு இருந்தால் பெண் அரசாளும் ஸ்த்ரீ ராஜ்யம் என்று குற்றம் சொல்லக்கூடும். அதனால்தான் உன்னைப் பெரியபெருமாள் திருநாமத்துடன் இணைத்துக் கூறுகிறார்கள் போலும்.

விளக்கம் – பொதுவாக இந்த உலகில் ஒரு பெண்ணைக் குறிப்பிடும்போது, “இன்னாரின் பத்தினி”, என்று கூறுவதே வழக்கமாகும். இதே போன்று இங்கு பாதுகையானது, “ரங்கநாத பாதுகை” என்று பெரியபெருமாளை முன்னிட்டுக் கூறப்படுவதை உணர்த்துகிறார்.

படம் – ஒரு நாட்டு அரசன் மீது மலர்கள் தூவி, அவனைக் கௌரவிப்பது வழக்கமாகும். இந்த முறை சாதாரண அரசனுக்குப் பொருந்தும். ஆனால் இராமனின் ஸிம்ஹாஸனத்தில் வீற்றிருந்து ஆளும் பாதுகைக்கு, மரியாதைகள் அதிகம் இருக்கவேண்டாமா? ஆகையால்தான் இங்கு மலர்களை விட மிகவும் உயர்ந்த துளசியைத் தூவியுள்ளனரோ? (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: