jump to navigation

52. எம்பெருமானாரின் கீதா பாஷ்யம் December 11, 2007

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback
2-53 ச்ருதி விப்ரதிபந்நா தே யதா ஸ்தாஸ்யதி நிச்சலா
ஸமாதௌ அசலா புத்தி: ததா யோகம் அவாப்ஸ்யஸி

பாஷ்யம் – இங்கு ச்ருதி என்னும் பதம் கேள்விப்படுதல் என்னும் பொருள் தருவதாகும், வேதங்கள் என்னும் பொருளில் வரவில்லை. உன்னிடைய அறிவானது எனது சொற்களின் மூலம் மயக்கங்கள் நீங்கித் தெளிவு அடைகிறது. இந்த அறிவின் மூலம் பெறுவது என்ன? அனைத்துப் பொருள்களையும்விட மாறுபட்டதாக உள்ளதும், அழியாமல் உள்ளதும் ஆகிய ஆத்ம தத்துவத்தைப் பற்றி நிற்கும் தன்மையைப் பெறுகிறது. அந்த நிலையில் ஸ்திரமாக உள்ளது. அந்த நிலையில் அறிவை நிலை நிறுத்தி, கர்மங்களின் மூலம் மனதைத் தூய்மைப்படுத்தி, பலன் மீது விருப்பம் இல்லாத கர்மம் இயற்றினால் உனக்கு உண்மையான யோகம் கிட்டும். அந்த யோகத்தின் மூலம் உனக்கு ஆத்ம தரிசனம் (ஆத்ம தரிசனம் என்பதை ஆத்ம ஸாக்ஷாத்காரம் என்று கொள்ளவேண்டும்) கிட்டும்.

இங்கு கூறப்படுவது என்ன? முதலில் ஆத்மாவைக் குறித்த ஞானம் வேதங்களில் உள்ளவற்றைக் கற்பதன் மூலம் உண்டாகிறது. இந்த ஞானம் கர்மயோகம் மூலம் கிட்டுகிறது. இந்தக் கர்மயோகம் மூலம் அசைக்க இயலாத ஆத்மஞானம் ஏற்படுகிறது. இந்த ஞானத்தைப் போற்றுவதன் மூலம் யோகம் எனப்படும் ஆத்ம தரிசனம் கிட்டுகிறது. இங்கு ஆத்ம தரிசனமே யோகம் எனப்பட்டது.

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: