jump to navigation

55. எம்பெருமானாரின் கீதா பாஷ்யம் December 14, 2007

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback
2-56 துக்கேஷு அநுத்விக்மநா: ஸுகேஷு விகதஸ்ப்ருஹ:
வீதராகபயக்ரோத: ஸ்திததீ: முனி: உச்யதே

பாஷ்யம்

மனதிற்கு இன்பம் அளிக்கவல்ல பொருளைப் பிரிய நேர்ந்தாலும் இவன் துக்கம் கொள்வதில்லை. இவன் இன்பத்தை அனுபவிக்கவும் முயற்சி செய்வதில்லை. இன்பம் அளிக்கக்கூடிய பொருள்கள் அருகில் இருந்தாலும் அவற்றை அடைய முயற்சிப்பதில்லை. இவன் விருப்பம் மற்றும் கோபத்தை விடுத்துள்ளான். விருப்பம் என்பது நம்மிடம் இல்லாத பொருள் மீது பற்று வைத்து, அவற்றைப் பெற முயற்சிப்பது ஆகும். ஸ்திதப்ரஜ்ஞன் என்பவனுக்கு இந்த எண்ணம் வருவதில்லை. பயம் என்பது என்ன – தனக்கு விருப்பமான ஒரு பொருளைப் பிரிந்து விடுவோமோ என்ற எண்ணம் அல்லது நமக்கு விருப்பம் இல்லாத ஒன்றைப் பெற்று விடுவோமோ – என்பதாகும். இந்த நிலையில் ஸ்திதப்ரஜ்ஞன் அகப்படுவதில்லை. கோபம் என்பது என்ன – நமது மனம் நிலை தடுமாறி, நமக்குப் பிரியமான ஒன்றை நம்மிடம் இருந்து அகற்ற முயல்பவன் மீது உண்டாகும் வெறுப்பு அல்லது நமக்குப் பிடித்தம் இல்லாத ஒரு நிலையைச் சந்தித்தல் – என்பதாகும். இந்தக் கோபம் ஸ்திதப்ரஜ்ஞனை அண்டுவதில்லை. ஆக ஆத்மாவில் மட்டுமே தனது சிந்தனையை வைத்தபடி உள்ளவனே ஸ்திதப்ரஜ்ஞன் எனப்படுகிறான்.

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: