6. லக்ஷ்மீ தந்த்ரம் அத் – 1: ச்லோகம்: 19-20-21 December 18, 2007
Posted by sridharan in லக்ஷ்மீ தந்த்ரம்.trackback
பொருள் (19-20) – நாரதரால் ஸாத்வதத்தில் (ஸாத்வதம் என்பது பாஞ்சராத்ர ஆகமத்தின் ஸாத்வத ஸம்ஹிதையைக் குறிப்பதாகக் கொள்ளலாம்) உபதேசிக்கப்பட்டவர்களும், மலயநாட்டுப்பகுதிகளில் (மலய நாடு என்பது கன்யாகுமரி அருகில் உள்ள பகுதிகள் என்றும், ஒரிஸா அருகில் உள்ள பகுதிகள் என்றும் இரு கருத்துக்கள் உண்டு) அந்த முறையில் யாகங்கள் இயற்றி வந்தவர்களும் ஆகிய முனிவர்கள் – ப்ரஹ்ம ஸ்வரூபமாகவே உள்ளவரும், மிகவும் சிறந்தவரும், பகவத்தர்மத்தில் கரைகண்டவரும் ஆகிய நாரதரிடம் இதே கேள்வியைக் கேட்டனர்.
1-21 பகவம்ஸ்த்வச்ருதோ அஸ்மாபி: ஸத்த்வத: ஸத்த்வஸம்ச்ரய: சித்தே பகவதோ தர்மோ மோக்ஷைக பல லக்ஷணா:பொருள் – அந்த ரிஷிகள் நாரதரிடம், “பகவானே! தங்களிடம் இருந்து ஸத்த்வதம் எனப்படும் பகவத் தர்மத்தை நாங்கள் கேட்டு அறிந்து கொண்டோம். அது ஸத்வம் மட்டுமே நிரம்பியது என்றும், மோக்ஷத்தை உபதேசிப்பதையே இலக்காக உடையது என்றும் அறிந்து கொண்டோம்”, என்று தொடங்கினார்கள்.
Advertisements
Comments»
No comments yet — be the first.