jump to navigation

7. லக்ஷ்மீ தந்த்ரம் அத் – 1: ச்லோகம்: 22-23-24 December 19, 2007

Posted by sridharan in லக்ஷ்மீ தந்த்ரம்.
trackback

1-22 தத்ர தத்த்வார்த்தகதநே லக்ஷ்மீ மாஹாத்ம்யம் உத்தமம்
ஸூசிதம் தத்ர தத்ர ஏவ நாப்ருஷ்டத்வாத் ப்ரகாசிதம்

பொருள் – அப்போது தாங்கள் ஆங்காங்கு மஹாலக்ஷ்மியின் மேன்மைகளைக் குறித்துக் கூறினீர்கள். ஆயினும் நாங்கள் அவற்றைக் குறித்து எந்தவிதமான கேள்விகளையும் எழுப்பாத காரணத்தினால், நீங்களும் அதனை விளக்கிக் கூறவில்லை.

1-23 இச்சாமஸ்ததிதம் ச்ரோதும் பவஸாகர தாரகம்
பத்மினீ வைபவம் ஸர்வம் ப்ரஜ்ஞாபயது நோ பவாந்

பொருள் – நாங்கள் பத்மினியின் (மஹாலக்ஷ்மி) வைபவம் குறித்துக் கேட்க ஆவலாக உள்ளோம். அது மட்டுமே ஸம்ஸாரம் என்ற கடலின் துன்பங்களைக் கடக்க உதவுவதாகும். எங்களுக்கு அந்த மேன்மைகள் குறித்த ஞானம் அளிக்கவேண்டும்.

1-24 நதா: ஸ்ம சிரஸா பாதௌ தவ ஸம்ஸார தாரகௌ
அதீஹி போ முநே திவ்யம் ப்ரபந்நாஸ்த்வாம் சிரம் வயம்

பொருள் – ஸம்ஸாரம் என்ற பிடியில் சிக்குண்டவர்களுக்கு ஆதாரமாக உள்ள உங்கள் திருவடிகளில் எங்கள் தலைவணங்கிக் கேட்கிறோம். நாங்கள் மிகவும் பணிந்து கேட்பதால், அதனை நீங்கள் எங்களுக்கு உபதேசிக்க வேண்டும்.

படம் – உறையூர் கமலவல்லித் தாயார் (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: