jump to navigation

ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம் -91 December 20, 2007

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback
அந்யேஷு பத்மா கமலாசந அத்யை:
ரங்கேஷு ரங்காதிபதே: ச்ரிதேஷு
பதாவநி த்வாம் அதிகம்ய ஜாதம்
பதம் முராரே: அதிதைவதம் ந:

பொருள் – உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைத் தவிர்த்து அவனது மற்ற உறுப்புக்களில் மஹாலக்ஷ்மி, ப்ரம்மன் போன்றோர் உள்ளனர். இவர்கள் அனைவரும் அடைந்து, வணங்கும் அவனது திருவடிகளோ உன்னை அடைந்தது. இதனால் நீ எங்களுக்கு ஆராதிக்க ஏற்றவளாக உள்ளாய்.

விளக்கம் – பெரியபெருமாளின் பல்வேறு அவயவங்களில் (உடல் உறுப்புகள்) மஹாலக்ஷ்மி, ப்ரம்மன், ருத்ரன் என்று பலரும் உள்ளனர். ஆயினும் அவர்களை அண்டிய அந்த அவயவங்களுக்கு எந்தப் பெருமையும் உண்டாகவில்லை. ஆனால் அவன் திருவடியானது பாதுகையை அண்டியது. அதன் விளைவு – மற்ற அவயவங்களைவிட மிகவும் உயர்வு பெற்றது. ஆக, பாதுகையை அண்டியவர்கள் தாமாகவே உயர்வார்கள் என்பதில் ஐயம் இல்லை.

படம் – மற்ற அவயவங்களுக்கு இல்லாத விசேஷ கவனிப்பாகத் திருவடிகளைப் பட்டுத் தலையணையில் வைத்துள்ளதைக் காண்க. இந்தப் பெருமை, திருவடிகளுக்கு பாதுகையின் ஸம்பந்தம் காரணமாக வந்தது. நம்பெருமாள் மோஹினி அலங்காரத்தில் உள்ளபடி (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: