21-லக்ஷ்மீ தந்த்ரம் அத் – 2: ச்லோகம்: 4-5-6 January 2, 2008
Posted by sridharan in லக்ஷ்மீ தந்த்ரம்.trackback

பொருள் – அனைத்து தோஷங்கள் நீங்கிய நிலையில் உள்ள ஆத்மா என்பது பரமாத்மா எனப்படுகிறது. அத்தகைய பரமாத்மா சேதனம் மற்றும் அசேதனம் ஆகிய அனைத்தையும் தன்னுள் அடக்கிவிடுகிறது (முதல் வரியானது அத்வைதம் போன்று தோன்றினாலும், அடுத்த வரியில் அந்தக் கருத்து நீக்கப்படுவது காண்க).
2-5 யேந ஸோ அஹம் ஸ்ம்ருதோ பாவ: பரமாத்மா ஸநாதந: ஸ வாஸுதேவோ பகவாந் க்ஷேத்ரஜ்ஞ: பரமோ மத:பொருள் – நித்யமாக உள்ள ஆத்மாவானது (பரமாத்மா) பகவான் என்றும், வாசுதேவன் என்றும், உயர்ந்தவன் என்றும், க்ஷேத்ரஜ்ஞன் என்றும் கூறப்படுகிறது.
2-6 விஷ்ணுர் நாராயணோ விச்வோ விச்வரூப இதீர்யதே அஹம்தயா ஸமாக்ராந்தம் தஸ்ய விச்வம் இதம் ஜகத்பொருள் – அவனே விஷ்ணு என்றும், நாராயணன் என்றும், விச்வ என்றும், விச்வரூப என்றும் போற்றப்படுகிறான். அவனாலேயே இந்த உலகங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டுள்ளன.
Advertisements
Comments»
No comments yet — be the first.