jump to navigation

75. எம்பெருமானாரின் கீதா பாஷ்யம் January 3, 2008

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback
3-3 லோகே அஸ்மிந் த்விவிதா நிஷ்டா புரா பரோக்தா மயாநக
ஜ்ஞாநயோகேந ஸாங்க்யாநாம் கர்ம யோகேந யோகிநாம்

பாஷ்யம்

க்ருஷ்ணன் அர்ஜுனனிடம் – நான் உனக்கு முன்பு கூறியவற்றை நீ சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இந்த உலகில் பலவகையான மக்கள், பலவகையான தன்மைகளுடன் உள்ளனர். இவர்களின் தன்மை, தகுதி ஆகியவற்றுக்கு ஏற்ப கர்மயோகமும், ஞான யோகமும் கூறப்பட்டது. இதில் முரண்பாடு இல்லை. இந்த உலகில் உள்ள மனிதர்களில் மோக்ஷம் பெறுவதில் விருப்பம் உள்ள அனைவருக்கும் ஞான யோகத்தில் ஈடுபடும் சக்தி இல்லை. ஆனால் பரம்பொருளிடம் பக்தி செலுத்தி, எந்தப் பலனையும் எதிர்பாராமல் உள்ள ஒருவனின் மனம் தூய்மை அடைந்து விடுகிறது. இப்படிப்பட்டவன் தனது புலன்களால் அலைக்கழிக்கப்படுவதில்லை. இவனுக்கு ஞானயோகம் கைகூடி விடுகிறது. கர்மங்கள் அனைத்தும் பகவத் ஆராதனமாகவே உள்ளது என்று ஸ்ரீமத் பகவத் கீதை பின்வருமாறு கூறுகிறது (18-46):

யத: ப்ரவ்ருத்தி: பூதாநாம் யேந ஸர்வம் இதம் ததம்
ஸ்வர்கர்மணா தம் ப்யர்ச்ய ஸித்திம் விந்ததி மாநவ :

இதன் பொருள் – யார் ஒருவனிடம் இருந்து இந்த உலகில் உள்ளவை உண்டானதோ, யாரால் இந்த உலகம் நிரப்பட்டுள்ளதோ அவனை ஒரு மனிதன் தனது கர்மங்களைச் செய்வதன் மூலமே ஆராதிக்கிறான் – என்பதாகும் . இதற்கு முன்னரும் பற்றில்லாமல் கர்மம் இயற்ற வேண்டும் என்று (2-47) – கர்மண்யேவாதி காரஸ்தே மா பலேஷு கதாசந – என்பதில் கூறப்பட்டது. இத்தகைய கர்மங்களின் மயக்கததில் இருந்து விடுபட்டவனுக்கு (2-55) – ப்ரஜஹாதி யதா காமாந் – என்று ஞானயோகம் உபதேசிக்கப்பட்டது.

ஆக ஆத்மாவில் ஈடுபடும் அறிவுடைய ஸாங்க்யர்களுக்கு மட்டுமே ஞானயோகம் கூறப்பட்டது. கர்மத்தில் ஈடுபடும் திறன் உள்ளவர்களுக்கு கர்மயோகம் கூறப்பட்டது. இங்கு ஸாங்க்ய என்பது புத்தியைக் குறிக்கும். இந்த புத்தி ஆத்மாவில் மட்டுமே ஈடுபாடு கொண்டது. இந்தப் புத்தியை உடையவர்கள் ஸாங்கியர்கள் எனப்படுகின்றனர். இந்த யோகத்தில் ஈடுபட இயலாதவர்களுக்கு கர்மயோகம் கூறப்பட்டது. புலன்கள் மூலம் அலைக்கழிக்கப்படும் புத்தியை உடையவர்களுக்கு கர்மயோகமும் , இவ்வாறு தடுமாறாத புத்தி உடையவர்களுக்கு ஞானயோகமும் கூறப்பட்டது. ஆகவே இங்கு முரண்பாடோ குழப்பமோ ஏற்பட வாய்ப்பில்லை.

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: