jump to navigation

ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம் 106 January 4, 2008

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback
பக்த்யா பரம் பவது தத் பரதஸ்ய ஸாதோ:
த்வத் ப்ரார்த்தநம் ரகுபதௌ மணிபாதரக்ஷே
கேந அசயேந ஸ முநி: பரமார்த்த தர்மீ
பத்ராய தேவி ஜகதாம் பவதீம் அவாதீத்

பொருள் – பெரியபெருமாளின் திருவடிகளைக் காப்பவளே! இராமனிடம் மிகுந்த பக்தியும் அன்பும் கொண்டிருந்த பரதன், அந்தக் காரணத்தால் மட்டுமே உன்னை ஆராதித்தான் என்று கூற இயலாது. உண்மையை நன்கு அறிந்த வசிஷ்ட மகரிஷி , நீ உலக நன்மைகளை அளிப்பவள் என்று கூறினார் அல்லவோ? வெறும் பக்தி காரணமாக பரதன் உன்னை ஆராத்தித்தான் என்றால், வசிஷ்டர் புகழ்ந்தது என்ன காரணத்தினால்?

விளக்கம் – நம்மிடம் ப்ரியமானவர்களின் பொருள்களை நாம் பாதுகாத்துப் போற்றுவது இயல்பே ஆகும். இதன் மூலம், வெறும் பக்தி, ப்ரியம் காரணமாக மட்டுமே பரதன் பாதுகையைப் போற்றினான் என்று கூற இயலாது. ஏன் என்றால் – வசிஷ்டர் பாதுகையப் போற்றினார் என்பதை நாம் காணலாம். உண்மையான பெருமை பாதுகைக்கு உள்ளதால் அல்லவோ அவர் போற்றியிருக்கக்கூடும்?

படம் – நம்மாழ்வாரின் திருநாமத்தைக் கொண்டதால் பாதுகைக்கு இத்தனை மேன்மைகள் உள்ளனவோ? (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்)

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: