jump to navigation

25-லக்ஷ்மீ தந்த்ரம் அத் – 2: ச்லோகம்: 16-17 January 6, 2008

Posted by sridharan in லக்ஷ்மீ தந்த்ரம்.
trackback
2-16 லக்ஷ்மீ நாராயணாக்யாதமதோ ப்ரஹ்ம ஸநாதனம்
அஹம்தயா ஸமாக்ராந்தோ ஹ்யஹமர்த்த: ப்ரஸித்யதி

பொருள் – ஆக நித்யமாக உள்ள ப்ரஹ்மம், லக்ஷ்மிநாராயணன் என்றே கூறப்படுகிறது. இவ்விதம் கூறுவதற்குக் காரணம் – “நான் என்ற எண்ணம்” இல்லாமல் “நான்” என்னும் ஒரு வஸ்துவே இருக்க இயலாது என்பது ப்ரஸித்தமாகும். [இங்கு அஹந்தா, அஹம் என்ற பதங்கள் சற்றே கடினமானவையாகும். அஹம் என்றால் ” நான்” என்று பொருளாகும். அஹந்தா என்றால் “நான் என்ற எண்ணம்” ஆகும். உதாரணமாகச் சூரியன்-சூரியனின் ஒளி என்பதை எடுத்துக்கொண்டால் அஹம் என்பது சூரியன், அஹந்தா என்பது ஒளி என்ற முறையில் பொருள் கொள்ளவேண்டும். அதாவது – ஒரு பொருள், அதன் தன்மை என்ற உறவுமுறை வெளிப்படுவது காண்க. அஹம் என்பது ஒரு பொருள், அஹந்தா என்பது அந்தப் பொருள் இருக்கும் நிலை என்றும் பொருள் கூறலாம்].

2-17 அஹமர்த்தஸமுத்தா ச ஸாஹம்தா பரிகீர்த்திதா
அந்யோந்யேநாவிநாபாவாதந்யோந்யேந ஸமந்வயாத்

பொருள் – அஹம் (நான்) என்ற ஒன்று இல்லையெனில், அஹந்தா (நான் என்ற எண்ணம்) என்பது இல்லை; அஹந்தா என்பது இல்லை என்றால் அஹம் என்பது இல்லை. ஆக இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு கொண்டு, ஒன்று இல்லை என்றால் மற்றதும் இல்லை என்றாகிறது [ஒரு சில உரைகளில் கூறப்படும் பொருள் என்னவென்றால் – அஹம் என்பது நாராயணனைக் குறிக்கும். அவனே அனைத்து ஆத்மாக்களிலும் உள்ளான். இவனுக்கு உண்டாகும் அஹந்தா (நான் என்னும் எண்ணம்) என்பதே மஹாலக்ஷ்மி ஆவாள். ஆக ஒன்று இல்லாமல் மற்றது இல்லை என்றாகிறது].

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: