jump to navigation

80. எம்பெருமானாரின் கீதா பாஷ்யம் January 8, 2008

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback
3-8 நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹி அகர்மண:
சரீரயாத்ரா அபி சதே ந ப்ரஸித்த்யேத் அகர்மண:

பாஷ்யம்

இங்கு அவசியமான கர்மம் (நித்யம்) என்பது பல யுகங்களாகத் தொடர்ந்து வரும் கர்மம் என்றாகும். இந்த உடல் அல்லது ப்ரக்ருதியுடன் தொடர்புடைய கர்மங்கள் பலவும் தொடர்ந்து வருபவை ஆகும். ப்ரக்ருதியுடன் உண்டான இந்தத் தொடர்பு உனது பூர்வ வாசனைகள் மூலம் ஏற்படுகின்றது. ஆகவே நீ கர்மங்களைத் தொடர்ந்து இயற்ற வேண்டும் – ஏன் என்றால், உனக்கு இவை எளிதாகவே உள்ளதாலும் (பல ஆண்டுகளாகச் செய்து வந்த காரணத்தினால்), இவற்றிலிருந்து நழுவாமல் (கர்மயோகத்திலிருந்து) இருப்பதற்காகவும் ஆகும்.

கர்மயோகத்தை விட மாறுபட்டு இருக்கும் அனைத்தையும் விட, ஞான யோகத்தையும் விட கர்மயோகமே சிறந்தாகும். இங்கு உள்ள அகர்மம் என்பது, கர்மம் செய்யாமல் இருப்பதைக் கூறவில்லை; ஞானயோகத்தையே கூறுகிறது. இது எப்படி எனில் – ச்லோகம் 3-4 ல் நைஷ்கர்ம்யம் புருஷோ அநுச்தே – கர்மம் செய்யாமல் இருப்பதில் இருந்து என்றே உபதேசிக்கப்பட்டது.

ஞானயோகத்தில் ஒருவனுக்கு அதிகாரம் இருந்தாலும் கர்மயோகமே அவனுக்குச் சிறந்தது, காரணம் – ஞானயோகம் இயற்றுவதற்குக் கடினமானது; அதனை முன்பு செய்யாத காரணத்தினால், அனுபவம் இன்மையால் நழுவிவிட வாய்ப்புகள் அதிகம் ஆகும். பின்னால் வரப்போகும் ச்லோகங்களில் ஆத்மஞானம் என்பது கர்மயோகத்திலேயே அடங்கியது என்று விளக்கப்பட உள்ளது. இந்தக் காரணத்தாலும் கர்மயோகமே சிறந்ததாகும்.

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: