jump to navigation

82. எம்பெருமானாரின் கீதா பாஷ்யம் January 10, 2008

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback
3-9 யஜ்ஞார்த்தாத் கர்மண: அந்யத்ர லோக: அயம் கர்மபந்தந:
       ததர்த்தம் கர்ம கௌந்தேய முக்தஸங்க: ஸமாசர

பாஷ்யம்

இங்கு ஒரு கேள்வி எழக்கூடும். (நமது உடலைப் பேண) பொருள் ஈட்டும்போது, அதற்காகச் செய்யப்படும் செயல்கள் – நமக்காக, எனக்காக – என்ற சிந்தனையின் அடிப்படையில் அமைந்து விடக்கூடும். இதனால் மனம் சிதறி, கர்மம் இயற்றுபவன் அந்தக் கர்மங்கள் உண்டாக்கும் பந்தத்தின் மூலம் கட்டப்படுவான் அல்லவா? இதற்கு விடை தருகிறான்.

இந்த உலகில் உள்ளோர் தங்கள் சுயநலத்திற்காகக் கர்மங்கள் இயற்றும்போது மட்டுமே பந்தம் அவர்களைப் பிணைக்கிறது. ஆனால் யாகத்திற்குப் பொருள் சேர்ப்பதற்காகக் கர்மம் இயற்றும்போது இவ்வாறு ஏற்படுவதில்லை (பந்தப் பிணைப்பு). ஆக யஜ்ஞம் முதலானவற்றுக்குப் பொருள் ஈட்டும்போது, அந்தப் பொருள் யஜ்ஞத்திற்கு மட்டும் அல்லாமல் நமக்கும் பயன்படும் என்ற எண்ணம் ஏற்படக்கூடாது. இப்படிப்பட்ட கர்மம் மூலம் ஆராதிக்கப்படும் பரம்பொருள், அந்த மனிதனின் கர்ம வாசனைகளைப் போக்கடித்து, அவன் மனதை ஒருநிலைப்படுத்தி, ஆத்மதரிசனம் ஏற்படும்படிச் செய்வான்.

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: