jump to navigation

83. எம்பெருமானாரின் கீதா பாஷ்யம் January 11, 2008

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback
3-10 ஸஹ யஜ்ஞை: ப்ரஜா: ஸ்ருஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதி:
         அநேந ப்ரஸ விஷ்யத்வம் ஏஷ வ: அஸ்த்விஷ்ட காமதுக்

பாஷ்யம் –

இந்த வாழ்வின் முக்கியமானவை கிடைக்கும் வரையில் இந்த உடலை நிலை நிறுத்த வேண்டும். இதற்கு யஜ்ஞத்தில் எஞ்சியுள்ள உணவை மட்டுமே உண்டு வர வேண்டும். இவற்றை விடுத்து வேறு வழிகளில் உடலைப் பேணுவதால் தோஷமே உண்டாகும் என்று க்ருஷ்ணன் கூறுகிறான்.

தைத்திரீய நாராயணாநுவாகம் (11-3) – பதிம் விச்வஸ்ய – அனைத்திற்கும் பதியாக நாராயணனே உள்ளான் – என்று கூறப்பட்டது. இதன் மூலம் ப்ரஜாபதி என்ற பதம் நாராயணனைக் குறிப்பதாகவும், அந்த நாராயணனே அனைத்திற்கும் நாயகன் என்றும், அவனே உலகைப் படைத்தவன் என்றும், அவனே உலகின் ஆத்மாவாக உள்ளான் என்றும் கொள்ள முடியும்.

ஸ்ருஷ்டி காலத்தில் உயிரினங்கள் அனைத்தையும் படைத்த ஸர்வேச்வரன், அந்த உயிரினங்கள் தங்கள் வாழ்வின் தேவையை உணர இயலாமல், தங்கள் பெயர் மற்றும் உருவம் ஆகியவற்றையும் உணர இயலாமல் தவிப்பதைக் கண்டான். உடனே அவன் மனம் இரங்கி, அவற்றைத் தன்னுள்ளே இழுத்துக் கொண்டான். மிகுந்த இரக்கம் உள்ள அவன், மீண்டும் அவற்றை உருவாக்க எண்ணியவனாக, அவற்றை உருவாக்கி, அவற்றுடன் யஜ்ஞங்களையும் படைத்தான். இந்த யஜ்ஞங்கள் மூலம் அவை தன்னை ஆராதிக்கலாம் என்ற எண்ணத்துடன் படைத்தான். பின்னர் அவன், “இந்த யஜ்ஞங்கள் மூலம் நீங்கள் விருத்தி அடைவீர்கள். உங்களது உயர்ந்த ஆசையாகிய மோக்ஷம் என்பதையும், அதனைச் சார்ந்து உள்ளவற்றையும் இந்த யஜ்ஞங்களே அளிக்கும்”, என்றான்.

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: