jump to navigation

88. எம்பெருமானாரின் கீதா பாஷ்யம் January 16, 2008

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback

இப்படியாக இந்தச் சக்கரம் பரம்பொருளால் சுழல வைக்கப்படுகிறது. அன்னத்தில் இருந்து பூதங்கள் எனப்படும் ஜீவனுடன் கூடிய உடல்; மழையில் இருந்து அன்னம், யஜ்ஞத்தில் இருந்து மழை; கர்த்தா மூலம் இயற்றப்படும் கர்மத்தின் மூலம் யஜ்ஞம்; ஜீவனுடன் கூடிய உடல் மூலம் கர்மம்; மீண்டும் அன்னத்தால் உடல் – என்று உள்ளது. இப்படியாக இது ஒரு சக்கரம் போன்று ஒன்றுக்கொன்று தொடர்புடன் உள்ளது.

இந்த உலகில் அநுஷ்டான முறைகளில் ஈடுபட்ட ஒருவன் – கர்மயோகம் அல்லது ஞானயோகம் என்று எதனை இயற்றுபவனாக இருந்தாலும் – இந்தச் சக்கரத்தை யஜ்ஞம் மூலம் தொடர்ந்து சுழலும்படிச் செய்யாமல் இருந்தால் விளைவது என்ன? அந்த யஜ்ஞத்தில் எஞ்சிய உணவை உண்டு, தனது உடலைப் பேணாமல் இருந்தால், அவன் பாவமான வாழ்க்கையை வாழ்கிறான். அவன் வாழ்வு பாவத்தில் துவங்கி, பாவத்திலேயே வளர்கிறது. ஆகவே இவன் ஆத்மாவில் திளைக்காமல், தனது இந்த்ரியங்களில் மட்டுமே திளைத்து வாழ்கிறான். இப்படிப்பட்டவர்களுக்கு புலன்கள் என்பது இன்பத்தை அளிப்பவையாக மட்டுமே உள்ளன. அவனது உடலில் ரஜோ மற்றும் தாமஸம் மட்டுமே பெருகி உள்ளன. ஆத்ம தரிசனத்தில் இருந்து மனம் திரும்பி, புலன்களின் வழியே தென்படும் விஷயங்களில் மட்டுமே மனம் வைக்கிறான். அவன் ஆத்ம தரிசனம் பெற விரும்பினாலும், அந்தச் செயல் நிறைவேறாமல் போகிறது. இவன் வாழ்க்கையே வீணாகிறது.

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: