ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம் 119 January 17, 2008
Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.trackback

பொருள் – ஸ்ரீ ரங்கநாதனே இராமனாக அவதரித்து, தனது திருவடிகளுக்குப் பதிலாக, அதனைவிட உயர்ந்த தனது பாதுகைகளை, தனது தம்பியான பரதனிடம் அளித்தான். அந்தப் பாதுகைகளை எப்போதும் உபாஸிக்கும்படி அளித்தான். இந்தப் பாதுகைகள் உள்ளதைக் காப்பாற்றும், இல்லாதவற்றை அளிக்கவும் செய்யும் என்று பெரியோர்களால் கூறப்படுகின்றன. அப்படிப்பட்ட இந்தப் பாதுகைகள் எனது அற்பத்தன்மையை நீக்க வேண்டும்.
விளக்கம் – நமது அற்பமான தன்மைகள் என்ன என்பது நாமே அறியமாட்டோம். அவற்றைப் பாதுகைகள் அறிந்து, அவற்றை நீக்கியும் விடுகிறாள் என்றார்.
படம் – இராமனாக நின்ற அழகியமணவாளன் (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).
Advertisements
Comments»
No comments yet — be the first.