jump to navigation

90. எம்பெருமானாரின் கீதா பாஷ்யம் January 18, 2008

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback

ஆகவே இவனுக்கு ஆத்ம தரிசனம் பெறுவதற்கு, கர்மயோகத்தின் மூலம் செய்வது ஏதும் இல்லை. இவன், ஒரு செயலைத் தொடங்கவோ அல்லது தொடங்கிய ஒன்றைக் கைவிட்டாலோ பாவம் ஏற்படுவதில்லை – காரணம், இவனது ஆத்ம தரிசனம் இப்படிப்பட்ட செயல்களின் மூலம் நிலை நிற்பது கிடையாது. இவனுக்கு ஆத்மாவைத் தவிர உள்ள இதர பொருள்கள் மூலம் கிட்டுவது ஏதும் இல்லை; இவற்றால் பலன் இருந்தால் அல்லவா இவற்றின் மீது பற்றுதல் உண்டாகும்? ஆத்ம தரிசனம் பெற்ற இவன் ஏறத்தாழ மோக்ஷம் அடைந்ததாகவே கூற முடியும்.

மேலும் பல வழிகளிலும் முயற்சி செய்து ஆத்ம தரிசனத்தைப் பெறுவது என்பது, ஆத்ம தரிசனத்தைப் பெற்றவனுக்கு தேவையில்லை. ஆனால் ஆத்ம தரிசனம் பெறாமல் உள்ள ஒருவனுக்கு, கர்மயோகமே ஆத்மதரிசனம் பெறச் சிறந்த வழியாகும். இந்த வழியில் ஆத்ம தரிசனம் பெறுவது எளியது; தவறுகள் ஏற்பட வாய்ப்புகள் குறைவு; ஆத்ம தத்துவத்தை உள்ளடக்கியது; ஞானயோகம் கைகூடியவர்களும் தங்கள் உடலைப் பேணும் பொருட்டு இயற்றப்படுவது – இந்தக் காரணங்களால் ஆத்மதரிசனம் பெற கர்மயோகம் மிகவும் சிறந்தது ஆகும்.

ஆகவே கர்மங்களைப் பற்றுதல் இன்றி இயற்ற வேண்டும் என்றும், இந்தக் கர்மங்களை நீ செய்யவில்லை என்ற எண்ணத்துடனும் (இந்த எண்ணம் இருந்தால் மட்டுமே பலன் மீது பற்றுதல் ஏற்படாது) நீ கர்மங்களை இயற்றுவாயாக. இப்படிப்பட்டவன் மிகவும் உயர்ந்த ஆத்மாவை (ஆத்ம தரிசனம்) அடைகிறான்.

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: