jump to navigation

92. எம்பெருமானாரின் கீதா பாஷ்யம் January 20, 2008

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback
3-21 யத் யத் ஆசரதி ச்ரேஷ்ட: தத் தத் ஏவ இதர: ஜந:
         ஸ யத்ப்ரமாணம் குருதே லோக: தத் அநுவர்த்ததே

பாஷ்யம்

ச்ரேஷ்டன் – மிகவும் புகழத்தக்க ஒருவன், சாஸ்திரங்களை நன்கு அறிந்தவன், அவற்றைப் பின்பற்றி நடப்பவன் – இப்படிப்பட்ட ஒருவனை – அவன் செய்யும் கர்மங்களை – அந்தச் சாஸ்திரஞானம் இல்லாதவர்கள் அப்படியே பின்பற்றிச் செய்து வருகின்றனர். அவன் எந்த அளவிற்கு அந்தக் கர்மங்களைப் பின்பற்றுகிறானோ, அதே அளவிற்கு மற்றவர்கள் பின்பற்றுகின்றனர். எனவே நல்ல ஒழுக்கம் உள்ள ஒருவன், தன்னைப் பின்பற்றி இந்த உலகம் நடக்கிறது என்ற நிலையில் உள்ளதால், அந்த உலகத்தைக் காப்பாற்ற, தனக்கு விதிக்கப்பட்ட கர்மங்களைத் தொடர்ந்து இயற்றவில்லை என்றால், உலக மக்களைக் கெடுத்த காரணத்தால் அவனுக்குப் பாவம் ஏற்படும். இதனால் அவன் ஞானயோகம் கைகூடப் பெற்றிருந்தாலும், அதில் இருந்து நழுவி விடுவான்.

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: