jump to navigation

97. எம்பெருமானாரின் கீதா பாஷ்யம் January 25, 2008

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback
3-29 ப்ரக்ருதே: குணஸம்மூடா: ஸஜ்ஜந்தே குண கர்மஸு
தாந் அக்ருத்ஸ்நவித: மந்தாத் க்ருத்ஸ்நவிந் ந விசாலயேத்

பாஷ்யம்

முழுமையான ஞானம் அற்றவர்கள், ஆத்மதரிசனம் பெற விருப்பம் உடையவர்களாக இருந்தாலும், ஆத்மாவைப் பற்றிய ஞானத்தை மறைக்கப்பட்டவர்களாகவே உள்ளனர். இந்த மயக்கம் எப்படி நிகழ்கிறது – ப்ரக்ருதியின் குணங்கள் மூலம் ஏற்படுகிறது. ஆகவே இவர்கள் அந்தக் குணங்கள் மூலம் ஏற்படும் கர்மயோகத்தில் மட்டுமே ஈடுபடுவார்கள். இவர்களுக்கு கர்மயோகத்தில் ஈடுபடும் தகுதி மட்டுமே உள்ளது.

முழு ஞானம் உள்ள ஒருவன், ஞானயோகத்தில் நிலைநிற்கும் ஒருவன், இப்படிப்பட்டவர்களை கர்மயோகத்தில் இருந்து நழுவச் செய்யக் கூடாது. இவர்கள் உயர்ந்த மனிதர்கள் செய்யும் கர்மங்களைப் பின்பற்றியபடி உள்ளனர். உயர்ந்த மனிதர்கள் கர்மயோகத்தைக் கைவிட்டு ஞானயோகம் இயற்றுவதைக் கண்டவுடன், தாங்களும் கர்மயோகத்தைக் கைவிட முயற்சிக்கின்றனர். இப்படிப்பட்ட நிலையை ஞானம் உள்ளவன் ஏற்படுத்தக்கூடாது. ஆகவே கர்மயோகத்தில் இவனும் எப்போதும் ஈடுபட்டபடி இருத்தல் வேண்டும். இவ்வாறு கர்மயோகத்தில் ஈடுபடும்போது, கர்மபந்தம் பற்றிவிடாமல் இருப்பதற்காக, ஆத்மாவைப் பற்றிய உண்மையான அறிவை நிலைநிறுத்தியும், தான் சுதந்திரமாகச் செயல்படக்கூடியவன் அல்லன் என்று சிந்தித்தபடியும் இருக்கவேண்டும். இப்படியாக இவன் அவர்களுக்கு (குறைந்த ஞானம் கொண்டவர்களுக்கு) கர்மயோகம் என்பது ஆத்மதரிசனத்திற்கான பாதையை அளிக்கும் என்பதை உணர்த்த வேண்டும். இவர்களுக்கு கர்மயோகத்தின் மீது ஈடுபாட்டினை ஏற்படுத்தவேண்டும்.

ஞானயோகத்தில் ஈடுபட்ட ஒருவனுக்கும், ஞானயோகத்தைக் காட்டிலும் கர்மயோகமே சிறந்தது என்று முன்பே கூறப்பட்டது. ஆகவே அனைவராலும் புகழப்படும் ஒருவன் உலகின் நன்மைக்காகக் கர்மயோகம் இயற்றியே தீரவேண்டும். ஆத்ம ஸ்வரூபம் ப்ரக்ருதியை விட வேறுபட்டது என்றும், கர்மங்கள் இயற்றுவது ப்ரக்ருதியின் குணங்கள் மூலமே என்றும் முன்பே கூறப்பட்டது. “கர்மங்கள் இயற்றுவது ஆத்மாவுக்குக் கிடையாது” என்பது ஆத்மாவின் ஸ்வபாவம் அல்ல; இந்தத் தன்மை ப்ரக்ருதியின் குணங்களின் தொடர்பு ஆத்மாவிற்கு உண்டவதால் ஆகும். ஆகவே ப்ரக்ருதியின் தொடர்பால் என்ன நடக்கிறது, தொடர்பின்மையால் என்ன நிகழ்கிறது என்று உணர்ந்து, கர்மம் இயற்றுதல் என்பது ப்ரக்ருதியின் குணங்களால் என்பதை அறியவேண்டும்.

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: