jump to navigation

100. எம்பெருமானாரின் கீதா பாஷ்யம் January 28, 2008

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback

இப்படிக் கர்மம் இயற்றும்போது சிந்தனை எவ்வாறு இருக்கவேண்டும் என்றால் – தனக்கு அடிமையாக உள்ள ஜீவாத்மா என்ற கர்த்தா மூலம், தனக்கு அடிமைகளாக உள்ள செயல்பாடுகள் மூலம், தன்னுடைய ஆராதனை என்ற பலனை முன்னிட்டு, ஸர்வேச்வரன் கர்மம் செய்ய வைக்கிறான் – என்று எண்ண வேண்டும். கர்மபலனில் சுயநலத்துடன் எண்ணாமல் இருத்தல் வேண்டும். மேலும் உனக்கு ஏற்படும் சிந்தனையான, “பல ஆண்டுகளாக, பழைமையான, அளவற்ற பாவங்கள் என்னை ப் பீடிக்குமா?”, என்ற எண்ணம் மூலம் ஏற்படும் பயத்தை நீக்க வேண்டும். எந்தவிதச் சோர்வும் இல்லாமல் கர்மயோகத்தில் ஈடுவாயாக – அந்த ஆராதனையில் மகிழ்ந்த ஸர்வேச்வரன், உன்னைக் கரையேற்றுவான்; பந்தப் பிடிகளை விலக்குவான். அவனே ஸர்வேச்வரனாகவும், நியமிப்பவனாகவும் உள்ளான் என்பதைக் கீழே உள்ள வரிகள் கூறுகின்றன:

  • ஸ்வேதாஸ்வதர உபநிஷத் (6-7) – தம் ஈச்வராணாம் பரமம் மஹேச்வரம் தம் தேவதானாம் பரமம் ச தைவதம் – ஈச்வரர்களுக்கு எல்லாம் மேலான ஸர்வேச்வரன், தேவர்களுக்கு எல்லாம் மேலான தேவாதிதேவன்
  • தைத்திரீய நாராயணவல்லீ (11-3) – பதிம் விச்வஸ்ய – உலகிற்கே நாயகன்
  • ஸ்வேதாஸ்வதர உபநிஷத் (6-7) – பதிம் பதீநாம் – நாயகனாக உள்ள பலருக்கும் நாயகன்.

ஈச்வரத்வம் என்பதும் சேஷித்வம் என்பதும் ஒன்றே ஆகும் – செயல்களைப் புரியும்படி நியமிப்பதைக் குறிக்கும்.

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: