jump to navigation

103. எம்பெருமானாரின் கீதா பாஷ்யம் January 31, 2008

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback
3-33 ஸத்ரும் சேஷ்டதே ஸ்வஸ்யா: ப்ரக்ருதே: ஜ்ஞாநவாந் அபி
ப்ரக்ருதிம் யாந்தி பூதாநி நிக்ரஹ: கிம் கரிஷ்யதி

பாஷ்யம்

இதுவரை கூறப்பட்டது – ப்ரக்ருதியின் தொடர்புடைய காரணத்தினால் ப்ரக்ருதியின் குணங்களாகிய ஸத்வ, ரஜோ மற்றும் தாமஸம் ஆகியவற்றால் கர்மம் என்பது இயற்றப்படுகிறது என்றும், இத்தகைய கர்த்ருத்வம் என்பது ஸர்வேச்வரனையே சார்ந்துள்ளது என்றும் கூறப்பட்டது. ஞானயோக அதிகாரம் பெற்றவர்கள், கர்மயோக அதிகாரம் பெற்றவர்கள் ஆகிய இருவருமே கர்மயோகத்தைப் பின்பற்றந்தே சிறந்தது – ஏன் என்றால், கர்மயோகத்திற்கு உள்ள உயர்வே காரணமாகும். அவையாவன – இது பின்பற்ற எளியதாகும்; நழுவாமல் இருக்க இயலும்; வேறு எதனையும் சார்ந்து இருப்பதில்லை; ஆத்ம ஞானத்தையும் தன்னுள் அடக்கியது. ஆனால் ஞானயோகம் என்பது பின்பற்றுவதற்கு மிகவும் கடினமான ஒன்றாகும்; எனவே அதில் இருந்து ஒரு நிலையில் நழுவ வாய்ப்புகள் உண்டு; உடலைப் பராமரிப்பது போன்ற இதர செயல்களைச் சார்ந்தே உள்ளது. அனைவராலும் புகழப்படும் ஒருவன் கர்மயோகம் இயற்றுவதே சரியானதாகும். இனி இந்தச் ச்லோகம் தொடங்கி இந்த அத்தியாயம் இறுதிவரை ஞானயோகம் இயற்றுவதற்கு அரியது என்பது விளக்கப்படுகிறது. இதனால் தவறவும் வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட உள்ளது.

சாஸ்திரங்கள் கூறுவது – ப்ரக்ருதியை விட வேறான ஆத்மா என்பது ஸர்வேச்வரனுக்கு அடிமையாகவே உள்ளது; ஆனந்தமாகவும் ஞானமயமாகவும் உள்ளது – போன்றவையாகும். இப்படிப்பட்ட ஞானம் உள்ள ஒருவன் கூட, தனக்கு இயல்பாக உள்ள பழைய தொடர்புகள் காரணமாக, உலக விஷயங்களுடன் பழகுகிறான். ஞானம் உள்ள ஒருவனே இப்படி எனில் மற்ற ஜீவராசிகள் நிலை என்ன? அவையும் தங்கள் இயல்புக்கு ஏற்றபடியே நடக்கின்றன. ப்ரக்ருதியுடன் பல காலம் தொடர்பு கொண்ட இவை, அங்கு ஏற்பட்ட அனுபவங்கள் (வாசனை என்பர்) காரணமாக விஷயங்களுடன் பழகுகின்றன. இப்படியாகத் தொன்றுதொட்டு வரும் பழக்கம் உடைய ஜீவராசிகளை எந்தச் சாஸ்திரம்தான் என்ன செய்ய இயலும்?

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: