jump to navigation

9. இராமானுச நூற்றந்தாதி (பாசுரம் 15, 16) February 5, 2008

Posted by sridharan in இராமானுச100அந்தாதி.
trackback
15. சோராத காதல் பெருஞ்சுழிப்பால் * தொல்லை மாலை ஒன்றும்
பாராது அவனைப் பல்லாண்டென்று காப்பிடும் பான்மையன் தாள்
பேராத உள்ளத்து இராமானுசன் தன் பிறங்கிய சீர்
சாரா மனிசரைச் சேரேன் * எனக்கு என்ன தாழ்வினியே.

விளக்கவுரை – என்றும் வாடாத பக்தி பூண்டு (பரிபூர்ணமான பக்தி) , அத்தகைய பக்தி என்ற வெள்ளத்தில் ஏற்பட்ட பெருஞ்சுழி ஒனறில் அகப்பட்டவராக நின்றவர் பெரியாழ்வார் ஆவார். இவர் செய்தது என்ன? இந்த உலகம் என்ற ஸம்ஸாரக் கடலில் விழுந்து அவதிப்படும் ஜீவன்கள் படும் துன்பம் கண்டு இரக்கப்பட்டபடி உள்ளவனை; என்றும் உள்ளவனை; உயர்வற உயர்நலம் உடையவன், நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தான் என்று பலவாறு போற்றப்படுபவனை; “அவன் ஸர்வேச்வரன், அனைத்தும் பொருந்தியவன்”, என்ற ஏற்றத் தாழ்வு பாராமல், சாதாரண மனிதர்களை “தீர்க்காயுஷ்மாந் பவேத்” என்று ஆசி அளிப்பது போன்று, எம்பெருமாளுக்குப் பல்லாண்டு கூறினார். இவ்விதமாக அரங்கனுக்கே, “உன் செவ்வடி செவ்வித் திருக்காப்பு”, என்று மங்களாசாஸனம் செய்த பெரியாழ்வாரின் திருவடிகளை எம்பெருமானார் தனது மனதில் நீங்காமல் வைத்துள்ளார். இப்படிப்பட்டவர்கள் – கிட்டுவதற்கு மிகவும் அரியதான மனிதப் பிறவி எடுத்த போதிலும், நஷ்டத்துடன் கூடியவர்களே ஆவார்கள். இப்படியாக எம்பெருமானாரின் கருணைக்கு இலக்கான எனக்கு, இனி தாழ்வு எவ்விதம் ஏற்படும்? ஒரு குறையும் இன்றி, அனைத்தும் கூடும்.

16. தாழ்வு ஒன்றில்லா மறை தாழ்ந்து * தலமுழுதும் கலியே
ஆள்கின்ற நாள் வந்து அளித்தவன் காண்மின் * அரங்கர் மௌலி
சூழ்கின்ற மாலையைச் சூட்டிக் கொடுத்தவள் தொல்லருளால்
வாழ்கின்ற வள்ளல் * இராமனுசன் என்றும் மாமுனியே

பொருள் – திருவரங்கத்தில் கண்வளர்கின்ற பெரியபெருமாளின் உத்தமமான திருமேனிக்கு, அலங்கரிக்கத் தகுதி கொண்ட மலர் மாலையை, “இந்த மாலை அவனுக்கு உறுத்துமோ, மணம் சேர்க்குமோ”, என்று சோதிக்கும் விதமாகத் தனது தலையில் சூட்டி, அதனைக் களைந்து அவனுக்கு அளித்தாள் (ஆண்டாள்). இப்படிப்பட்ட ஆண்டாளின் கருணையாலேயே தனது வாழ்வு கொண்டவர் எம்பெருமானார் ஆவார். திருவரங்கத்தில் பங்குனி உத்திர நன்னாளில், அழகிய மணவாளன் ஸ்ரீரங்கநாயகியுடன் சேர்ந்து நின்றபோது அல்லவோ – பகவன் நாராயண – என்று சரணாகதி செய்தார்? இவ்விதமாக, தான் அழகிய மணவாளன் திருவடிகளில் சரணாகதி அடைந்து பெற்ற பலன்கள் அனைத்தையும் இந்த உலகம் முழுமைக்கும் அளித்த வள்ளல் ஆவார். அப்படிப்பட்ட மாமுனிவராக உள்ளவர் எம்பெருமானார் ஆவார். இராமாநுஜர் செய்தது என்ன? வேதங்கள் அனைத்தும் எந்தவிதமான தாழ்வுகளும் இன்றி இருந்து வந்தன. அப்படிப்படட உயர்ந்த வேதங்கள் மதிக்கப்படாமல், வேதமார்க்கம் என்பது முலையில் சென்றபடி இருந்து. எப்பொது இவ்விதம் ஆனது என்றால் – இருள்தருமாஞாலம் என்ற இந்தப் பூமியைக் கலியுகமானது ஆள்கின்ற காலத்தில் (கலியுகத்தில்) ஆகும். இந்தக் காலத்தில் வேதங்களை மீட்க, பரமபதத்தில் இருந்து வந்து ஸ்ரீபெரும்பூதூரில் அவதரித்து, இந்த உலகங்களைக் காத்தவர் எம்பெருமானார் ஆவார் என்று உணர்வீர்களாக.

Advertisements

Comments»

1. முரளி சேஷன் - November 2, 2015

“என்று மங்களாசாஸனம் செய்த பெரியாழ்வாரின் திருவடிகளை எம்பெருமானார் தனது மனதில் நீங்காமல் வைத்துள்ளார். இப்படிப்பட்டவர்கள் – கிட்டுவதற்கு மிகவும் அரியதான மனிதப் பிறவி எடுத்த போதிலும், நஷ்டத்துடன் கூடியவர்களே ஆவார்கள். ” – இந்தப் பகுதி சரியான அர்த்தத்தைத் தரவில்லை. அப்படிப்பட்ட எம்பெருமானாரை மனதால் எப்போதும் நினைத்திராத மனிதர்களிடம் நான் சகவாசம் வைக்க மாட்டேன். இப்படிப்பட்ட உறுதி இருக்கும் எனக்கு இனி என்ன குறை? என்பதுதான் சரி என்று நினைக்கிறேன்.

sridharan - November 3, 2015

இதற்கான வ்யாக்யானப் பகுதி : (சாராமனிசரை) அவற்றைத் தங்களுக்கு அபாச்ரயமாகப் பற்றியிராத மநுஷ்யரை “ந்ருதேஹமாத்யம் ப்ரதிலப்ய துர்லபம்” என்கிறபடியே அதிதுர்லபமான மநுஷ்ய தேஹத்தையுடையரா யிருந்தும், “புமாந் பவாப்திம் ந தரேத் ஸ ஆத்ம ஹ” என்னும்படி நஷ்டப்ராயரான மநுஷ்யரென்றபடி.
………….இந்தக் கருத்தை அடியொட்டியே இவ்விதம் பொருள் கொள்ளப்பட்டது. ஆயினும், அந்த வரியை – “இப்படியாக உள்ள எம்பெருமானாருடைய திருவடிகளைப் பற்றாதவர்கள் – கிட்டுவதற்கு மிகவும் அரியதான மனிதப் பிறவி எடுத்த போதிலும், நஷ்டத்துடன் கூடியவர்களே ஆவார்கள். அவர்களை நான் அண்டமாட்டேன்” – என்று படிக்கலாம்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: