jump to navigation

110. எம்பெருமானாரின் கீதா பாஷ்யம் February 7, 2008

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback
3-40 இந்த்ரியாணி மந: புத்தி: அஸ்ய அதிஷ்டாநம் உச்யதே
         ஏதை: விமோஹயதி ஏஷ: ஜ்ஞானம் ஆவ்ருத்ய தேஹிநம்

பாஷ்யம்

காமம் எதனைக் கொண்டு ஞானத்தை மறைக்கிறது? எதன் மூலம் ஆத்மாவைப் பற்றுகிரது? இந்த்ரியங்கள், மனம், விஷயங்களை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் ஆகியவையே காமத்தின் உபகரணங்களாக இருந்து வருகின்றன. இவற்றைக் கொண்டு காமம் ஆத்மாவைப் பற்றுகிறது. இவை மூன்றும் புலன்களின் மூலம் அறியப்படும் விஷயங்களுக்கு, பற்றுதல் காரணமாக அடிமைகளாகி விடுகின்றன. அப்போதும் காமம் செய்வது என்ன – ப்ரக்ருதியின் துணை கொண்டு (இங்கு ப்ரக்ருதி என்பது ப்ரக்ருதியின் விளைவாக உண்டாகிய உடல் ஆகும்) அதனுள் உள்ள ஆத்மாவின் ஞானத்தை மறைக்கிறது (நான் சுதந்திரமானவன், நானே உடல் போன்ற விபரீதமான ஞானம் பிறக்கிறது). இங்கு மயங்க வைப்பது என்பது – ஆத்மாவின் இயற்கை நிலையான ஞானம் என்பதைத் தகர்த்து, ஆத்மாவை விஷயங்களில் ஈடுபடுத்துவதாகும்.

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: