ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம் 141 February 8, 2008
Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.trackback
அதிகார பரிக்ரஹ பத்ததி
அபீஷ்டே பாதுகா ஸா மே யஸ்யாஸ் ஸாகேதவாஸிபி: அந்வய வ்யதிரேகாப்யாம் அந்வயமீயத வைபவம்பொருள் – பாதுகை இல்லாதபோதும், அவள் உள்ள போதும் எப்படிப்பட்ட தாழ்வுகளும், பெருமைகளும் ஏற்படுகிறது என்பதை அயோத்தி மக்கள் அறிந்து கொண்டனர். இப்படிப்பட்ட பாதுகை எனக்கு எஜமானியாக உள்ளாள்.
விளக்கம் – அந்வயம் என்பது மழைக்குப் பின்னர் பயிர் விளையும் என்பது போன்றதாகும். வ்யதிரேகம் என்பது மழை இல்லையானால் பயிர் இல்லை என்பதாகும். இது போன்று பாதுகை இருந்ததால் பரதன் ராஜ்ஜியம் ஆண்டான்; பாதுகை இல்லாத காரணத்தினால் இராமனுக்கு ராஜ்யம் கிட்டவில்லை, கானகத்தில் இருந்தான்.
Advertisements
Comments»
No comments yet — be the first.