jump to navigation

115. எம்பெருமானாரின் கீதா பாஷ்யம் February 12, 2008

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback
4.1 இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவாந் அஹம் அவ்யயம்
      விவஸ்வாந் மநவே ப்ராஹ மநு: இக்ஷ்வாகவே அப்ரவீத்
 
4-2 ஏவம் பரம்பரா ப்ராப்தம் இமம் ராஜஷர்யோ விது:
      ஸ காலந இஹதா யோகோ நஷ்ட: பரந்தப
 
4-3 ஸ ஏவ அயம் மயா தே அத்யயோக: ப்ரோக்த: புராதந:
       பக்த: அஸி மே ஸகா ச இதி ரஹஸ்யம் ஹி ஏதத் உத்தமம்

பாஷ்யம்

(ச்லோகம் 4-1, 4-2, 4-3 ஆகியவற்றுக்கானது) நான் கூறுகின்ற கர்மயோகம் என்பது, உனக்குப் போரில் ஈடுபாடு வரவேண்டும் என்பதற்காகவே என்று நீ கருதுதல் கூடாது. இதனை நான் விவஸ்வான் என்ற சூரியனுக்கு, உயிர்கள் மோக்ஷம் பெறும் வழியை அறியும் பொருட்டு, வைவஸ்வத மன்வந்தரத்தின் தொடக்கத்தில் உபதேசித்தேன் (ப்ரம்மனின் ஒரு நாள் என்பது 43200 இலட்சம் ஆண்டுகள் = ஒரு கல்பம் ஆகும். இந்தக் காலம் பதினான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியிலும் ஒரு மனு நிர்வகிப்பார். இப்போது ஏழாவது கல்பம் நடைபெறுகிறது. இதன் மனு சூரியனின் புதல்வனாகிய வைவஸ்வதன் ஆவான்). சூரியன் இதனை மனுவிற்கு உபதேசிக்க, மனு இதனை இக்ஷ்வாகுவிற்கு உபதேசம் செய்தான். இப்படியாகப் பரம்பரையாக உபதேசிக்கப்பட்டு வந்த இந்த யோகத்தை, ராஜரிஷிகள் அறிந்தவர்களாக இருந்தனர். பல ஆண்டுகள் கழிந்தமையாலும், இந்த உபதேசம் பெற்று வந்தவர்கள் புத்தி குறைவாக இருந்த காரணத்தினாலும் இது அழிந்துவிட்டது.

மிகவும் பழையதான இந்தக் கர்மயோகம் உனக்கு என்னால் கூறப்பட்டது – காரணம் நீ உனது பக்தியினாலும், நட்பினாலும் என்னிடம் முழுவதுமாக அடைக்கலம் என்று உள்ளாய். இங்கு கூறப்படும் கருத்து – இது முழுமையாகவும், பின்பற்ற வேண்டிய அங்கங்களுடனும் கூறப்பட்டது – என்பதாகும். இந்த யோகம் வேதாந்த ரகசியங்கள் பலவற்றை உள்ளடக்கியது. இதனால் இதனை என்னைத் தவிர வேறு யாராலும் உபதேசம் செய்ய இயலாது.

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: