jump to navigation

116. எம்பெருமானாரின் கீதா பாஷ்யம் February 13, 2008

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback
4-4 அவரம் பவத: ஜந்ம பரம் ஜந்ம விவஸ்வத:
       கதம் ஏதத் விஜாநீயாம் த்வம் ஆதௌ ப்ரோக்தவாந் இதி

பாஷ்யம்

இப்படியாகக் கர்ம யோகத்தின் அவசியத்தை உணர்ந்த அர்ஜுனன் கண்ணனின் திருஅவதாரத்தை உணர்ந்து கொள்ளும் வகையில் கேட்கிறான்.

காலங்களைக் கணக்கிட்டுப் பார்த்தால் உனது (க்ருஷ்ணன்) பிறப்பு என்பது (ஸ்ருஷ்டி காலத்திற்கு) மிகவும் பிந்தியே உள்ளது; எங்கள் சமகாலத்தைச் சார்ந்தது. உனது பிறப்பு இருபத்தெட்டாவது சதுர்யுகத்தில் த்வாபர யுகத்தின் இறுதியில் உள்ளது. முதல் சதுர்யுகத்தின் தொடக்கத்தில் தோன்றிய விவஸ்வான் என்ற சூரியனுக்கு நீ எவ்வாறு உபதேசம் செய்திருக்க இயலும்? இதனை நான் எவ்வாறு புரிந்து கொள்ள இயலும்?

இங்கு எந்த விதமான் முரண்பாடும் இல்லை. கண்ணன் தனது முந்தைய பிறப்பில் (ஏதோ ஓர் அவதாரத்தின் போது) சூரியனுக்கு உபதேசம் செய்திருப்பான். தனது முந்தைய பிறவிகளில், தான் என்ன செய்தோம் என்பது மஹாத்மாக்களுக்கு நினைவில் இருக்கும். இதனால் (அர்ஜுனன் க்ருஷ்ணனிடம் கேட்ட கேள்வி மூலம்) அர்ஜுனனுக்குத் தன்னிடம் பேசிக்கொண்டிருக்கும் வசுதேவரின் புத்திரனான க்ருஷ்ணன் ஸர்வேச்வரனே என்பது தெரியாமல் உள்ளது என்று கூற இயலாது. காரணம் – பின்னர் உள்ள ச்லோகங்களில் (ஸ்ரீமத் பகவத் கீதை: 10-12, 13) பின் வருமாறு கூறுகிறான்:

பரம் ப்ரஹ்ம பரம் தாம பவித்ரம் பரமம் பவான்
புருஷம் சாச்வதம் திவ்யம் ஆதிதேவம் அஜம் விபும்
ஆஹுத்வாம் ரிஷய: ஸர்வே தேவர்ஷி: நாரதஸ்ததா
அஸித: தேவலோ வ்யாஸ: ஸ்வயம் ச ஏவ ப்ரவிஷி மே

இதன் பொருள் – அர்ஜுனன் கூறுகிறான் : நீயே பரப்ரஹ்மம், பரஞ்சோதி, உயர்ந்தவன், பரிசுத்தமானவன். அனைத்து ரிஷிகளும் உன்னை எப்போதும் உள்ள புருஷன், ஆதிதேவன், பிறப்பற்றவன், எங்கும் உள்ளவன் என்று கூறுகின்றனர். இதே கருத்தை நாரதர், அஸிதர், தேவலர், வ்யாஸர் ஆகியோரும் கூறுகின்றனர். நீயும் உன்னைப்பற்றி இப்படியே என்னிடம் கூறுகிறாய் – என்பதாகும்.

… தொடரும்….

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: