jump to navigation

117. எம்பெருமானாரின் கீதா பாஷ்யம் February 14, 2008

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback

மேலும் பீஷ்மரும் மற்றவர்களும் ராஜஸூய யாகத்தின்போது பின்வருமாறு கண்ணனைப் பற்றிக் கூறியதை அர்ஜுனன் அறிவான் (மஹாபாரதம் : 2-38-23):

க்ருஷ்ண ஏவ ஹி லோகாநாமுத்பத்தி ப்ரபவாப்யய:
க்ருஷ்ணஸ்ய ஹி க்ருதே பூதமிதம் விச்வம் சராசரம்

இதன் பொருள் – இந்த உலகில் உள்ள அனைத்தையும் படைத்து, அழிப்பது கண்ணனின் செயலே ஆகும்; அசைகின்றதும், அசையாமல் உள்ளதும் ஆகிய பொருள்கள் அனைத்தும் கண்ணனுக்கு அடிமையாகவே உள்ளன – என்பதாகும்.

இங்கு அர்ஜுனன் எழுப்பிய முரண்பாடு இப்படியாக விளக்க இயலும். வசுதேவரின் புத்திரனான க்ருஷ்ணனே பகவான் என்பதை அர்ஜுனன் அறிவான். இப்படிக் கண்ணனைப் பற்றி அறிந்திருந்தாலும், அறியாதது போன்று கேள்வி கேட்டான். இதன் மூலம் அவன் உள்நோக்கம் புரிகிறது. இவன் கேட்க விரும்பும் கேள்விகள் என்ன?

  1. ஸர்வேச்வரனாகவும், தீயன என்பதற்கு எதிர்தட்டாக உள்ளவனும், நிறைந்த திருக்கல்யாண குணங்கள் உடையவனும், எங்கும் நிறைந்தவனும், அனைத்தும் அறிந்தவனும், உறுதி உடையவனும், தனது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறியவனாக உள்ளவனும் க்ருஷ்ணன் ஆவான். இப்படிப்பட்ட இவனுக்குச் சாதாரண மனிதர்கள், தேவர்கள் போன்று கர்மத்தின் மூலம் ஏற்படும் பிறப்பு உண்டா?
  2. இவன் பிறப்பு என்பது இந்திரஜாலம் போன்று பொய்யானதா?
  3. இவன் பிறப்பு உண்மையானதா?
  4. இவன் பிறப்பு உண்மையானால், அந்தப் பிறப்பு எவ்வாறு நிகழ்ந்தது?
  5. இவன் உடல் எப்படிப்பட்டது?
  6. இவன் பிறப்பு ஏன் நிகழ்ந்தது?
  7. இவன் பிறப்பு எப்போது நிகழ்ந்தது?

இதனைப் போன்ற கேள்விகளை அர்ஜுனன் நேரடியாகக் கேட்கவில்லை என்றாலும், க்ருஷ்ணன் இனி வரும் ச்லோகங்களில் கூறும் பதில்களை வைத்துப் பார்க்கும்போது, இந்தக் கேள்விகளை க்ருஷ்ணன் உணர்ந்தான் என்றே கொள்ள வேண்டும்.

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: