jump to navigation

120. எம்பெருமானாரின் கீதா பாஷ்யம் February 17, 2008

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback

ஆத்மமாயயா என்றால் என்னுடைய மாயை மூலம் என்பதாகும். இங்கு மாயா என்ற பதம் ஞானத்தைக் குறிக்கும் . இதனை வேத நிகண்டு தர்ம வர்க்கம் (22) – மாயாவயுநம் ஜ்ஞாநம் – மாயை, வயுநம் போன்ற பதங்கள் ஞானம் என்பதைக் குறிக்கும் – என்று கூறியது. மேலும் அறிஞர்கள் பலரும் – மாயயா ஸததம் வேத்தி ப்ராணிநாம் ச ஸுப அஸுபம் – மாயை என்னும் அறிவு மூலம் ப்ராணிகளுக்கு உண்டாகவல்ல நன்மை தீமைகளை அறிகிறான் – என்றனர்.

ஆக, “எனது ஞானத்தின் மூலம்” என்பது, “எனது விருப்பத்தின் மூலம்”, என்பதாகும். ஸர்வேச்வரனாக இருத்தல், பாவம் அற்றவனாக இருந்தல், உயர்ந்த குணங்கள் கொண்டிருத்தல், எனது விருப்பம் காரணமாகவே தேவர் மற்றும் மனிதர் போன்ற உருவம் எடுத்தல் – என்று எனக்கே உரிய தன்மைகள் எதனையும் இழக்காமல் நான் பலவாகப் பிறக்கிறேன். இதனை யஜுர்வேதம் – அஜாயமாநோ விஜாயதே – பிறப்பற்றவனாக இருந்த போதிலும், பலவாகப் பிறக்கிறான் – என்று கூறியது. ஆக இங்கு கூறப்படுவது – சாதாரண மனிதர்களின் பிறப்பு போன்று இவனது பிறப்பு அல்ல என்பதாகும். இங்கு உள்ள வேறுபாடு என்ன – இவன் தனது விருப்பத்தால் பிறக்கிறான், மற்றவர்கள் தங்கள் கர்மங்கள் காரணமாகப் பிறக்கின்றனர். ஆக இங்கு, முன்னர் உபதேசித்தமைக்கும் பின்னர் உபதேசித்தமைக்கும் எந்தவிதமான முரண்பாடும் இல்லை. முன்னர் உபதேசித்தமை என்பது (4-5) உன்னைப் போன்று எனக்கும் பல ஜன்மங்கள் கடந்து விட்டன, அவற்றை நான் அறிவேன் – என்பதாகும். பின்னர் உபதேசித்தமை என்பது கீழே உள்ள வரிகள் ஆகும்:

  • (4-7) – என்னை நானே படைத்துக் கொள்கிறேன்
  • (4-9) – யார் ஒருவன் எனது பிறப்பு மற்றும் செயலை உண்மையாக அறிகிறானோ.
Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: