jump to navigation

122. எம்பெருமானாரின் கீதா பாஷ்யம் February 19, 2008

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback
4-8 பரித்ராணாய சாதுநாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
       தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய சம்பவாமி யுகே யுகே

பாஷ்யம்

ஸாது என்ற பதம் நல்லவர்கள், தர்ம சீலர்கள் என்பவர்களைக் குறிக்கும். அந்தப் பதம் பரம்பொருளான க்ருஷ்ணனைச் சரணம் என்று புகுந்த வைணவர்களக் குறிக்கும். என்னுடைய நாமம், செயல்கள், ரூபம் ஆகியவை மனதிற்கும் வாக்கிற்கு எட்டாதவை; ஆயினும் இவர்கள் – அனைத்திலும் என்னைக் கண்டு, என்னைக் காணாமல் இருந்தால் மனம் வருந்தி இருப்பவர்கள் ஆவர். இவர்களுக்கு நான் இல்லாத ஒரு நொடிப்பொழுது கூட ஆயிரம் கல்ப காலம் போன்றதாகும். என்னை விட்டுப் பிரிய நேரிடும் என்றால், தங்களது ஒவ்வொரு அவயவமும் சோர்ந்து போய் விட்டதாக கருதுவார்கள். ஆகவே நான் இவர்களுக்கு எனது உருவத்தைக் காண்பிக்கும் பொருட்டும், என்னுடன் அவர்கள் பழகுவதற்காகவும், அவர்களைக் காப்பதற்காகவும் – தேவர்களாக, மனிதனாகப் பிறக்கிறேன்.

மிகவும் பாவம் நிறைந்த செயலாகிய எனது பக்தர்களை அவமதித்தல் போன்றவற்றைச் செய்யும் மனிதர்களை அழிக்கவும், எனது உபாஸனையாகிய வேத தர்மங்களைக் காக்கவும் நான் பிறக்கிறேன். மேலும் எனது மங்களகரமான உருவத்தைக் கண்டு அனைவரும் வணங்குவதற்காகவும் நான் தோன்றுகிறேன். நான் பிறப்பதற்கு க்ருதயுகம், த்ரேதாயுகம் போன்ற கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை.

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: