71-லக்ஷ்மீ தந்த்ரம் அத் – 4:ச்லோகம்: 19-20-21 February 23, 2008
Posted by sridharan in லக்ஷ்மீ தந்த்ரம்.trackback 4-19 ஸ்ருஜதே ஹி அநிருத்த: அத்ர ப்ரத்யும்ந: பாதி தத் க்ருதம் ஸ்ருஷ்டம் தத் ரக்ஷிதம் சாத்தி ஸ ச ஸங்கர்ஷண: ப்ரபு:
பொருள் – இந்த உலகில் உள்ள அனைத்தையும் அநிருத்தன் ஸ்ருஷ்டி செய்தபடி உள்ளான். அவனால் படைக்கப்பட்டதை காக்கும் பொறுப்பு ப்ரத்யும்நனின் செயலாக உள்ளந்து. இவ்விதம் காக்கப்பட்டதை ப்ரளய காலத்தில் அழிப்பது ஸங்கர்ஷணனின் செயலாக உள்ளது (முன்னர் ப்ரத்யும்நன் அனைத்தையும் படைப்பதாகக் கூறப்பட்டதே என்ற வேள்வி எழலாம். இது கல்பாந்தர காலத்தில் ஆகும்).
4-20 ஸ்ருஷ்டி ஸ்திதி அந்தகார்யேண சாஸ்த்ர தர்மபலேந ச அநுக்ரஹம் இமே தேவா: ஸதா விதததே ஸ்வயம்பொருள் – சாஸ்திரங்களில் கூறப்பட்டபடியே ஸ்ருஷ்டி, காப்பாற்றுதல், அழித்தல் ஆகியவற்றை இம்மூவரும் செய்தபடி உள்ளனர். இவர்கள் அனைத்து உயிர்களுக்கும் எப்போதும் அனுக்ரஹம் செய்தபடி உள்ளனர்.
4-21 யத்யப்யேக குண உந்மேஷ: ததா அப்யேதே ஹி ஷட்குணா: அந்யூநாநதிகா: ஸர்வே வாஸுதேவாத் ஸநாதநாத்பொருள் – இம்மூன்று வ்யூஹங்களிலும் ஒவ்வொருவரிடமும், குறிப்பிட்ட எனது குணங்கள் வெளிப்பட்ட போதிலும், அனைவரிடமும் எனது அனைத்துக் குணங்களும் இருக்கவே செய்கின்றன. இபடியாக இவர்கள், வாஸுதேவனுக்குச் சரிசமமாகவே உள்ளனர்.
Comments»
No comments yet — be the first.