jump to navigation

129. எம்பெருமானாரின் கீதா பாஷ்யம் February 26, 2008

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback

மேலும் விஷ்ணு புராணத்தில் பராசரர் (1-4-51, 52) கீழே உள்ளபடி கூறுகிறார்:

நிமித்த மாத்ரம் ஏவாயம் ஸ்ருஜ்யாநாம் ஸர்க்க கர்மணி
ப்ரதாநகரணீபூதா யதோ வை ஸ்ருஜ்ய சக்தய:
நிமித்த மாத்ரம் முக்த்வேதம் ந அந்யத் கிஞ்சித் அபேக்ஷதே
நீயதே தபதாம் ச்ரேஷ்ட்ட ஸ்வசக்த்யா வஸ்து வஸ்துதாம்

இதன் பொருள் – இந்த உலகைப் பொறுத்தவரை அவன் நிமித்த காரணமாக மட்டுமே உள்ளான்; ஏற்றத்தாழ்வுகள் என்பது அந்தந்த ஜீவனின் கர்மபலன் காரணமாகவே உண்டாகிறது – என்பதாகும். ஆக இந்த உலகைப் படைத்த பொதுவான காரணகர்த்தாவாக மட்டுமே ஸர்வேச்வரன் உள்ளான். இதனால் தேவர்கள், மனிதர்கள் போன்ற ஏற்றத்தாழ்விற்கான விசேஷ காரணமாக, இவர்கள் இயற்றி வந்த கர்மபலன்களே உள்ளன. ஆக ஜீவன்கள் அனைத்தும் தேவர்களாகவும் மனிதர்களாகவும் மாறுவதற்கு வேறு எதனையும் சார்ந்து இருப்பதில்லை. தங்களது கர்மபலன் காரணமாகவே இத்தகைய வடிவங்களை அவர்கள் பெறுகின்றனர். இதுவே இங்கு கூறப்பட்டது.

இப்படியாகப் படைப்பதில் நான் கர்த்தா என்றும், ஏற்றத்தாழ்வுகளில் நான் அகர்த்தா என்றும், பலன்களின் மீது எனக்குப் பற்றுதல் இல்லை என்றும் அறிபவன் – தனது கர்மங்களால் பீடிக்கப்படுவதில்லை. அவன் கர்மயோகம் இயற்றுவதற்குத் தடையாக உள்ள புண்ணிய பாவ கர்மங்களால் கட்டுப்படுவதில்லை. இதுவே இங்கு உணர்த்தப்பட்டது.

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: