jump to navigation

133. எம்பெருமானாரின் கீதா பாஷ்யம் March 2, 2008

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback
4-19 யஸ்ய ஸர்வே ஸமாரம்பா: காமஸங்கல்பவர்ஜிதா:
         ஜ்ஞாந அக்னிதக்தகர்மாணம் தம் அஹு: பண்டிதம் புதா:

பாஷ்யம் – வெறும் செயல்கள் மட்டுமே உடைய கர்மங்கள் மூலமாக ஞானம் என்பது எவ்வாறு ஏற்படும்? இங்கு விடை தரப்பட்டது. மோக்ஷத்தில் விருப்பம் உள்ளவன் (முமுக்ஷு) நித்யம், நைமித்தியம் மற்றும் காம்யம் ஆகிய கர்மங்களை இயற்றக்கூடும். இவற்றுக்கான பொருள்களையும் (பணம் போன்றவை) அவன் சேகரிக்கக்கூடும். இப்படிப்பட்ட இவனுடைய முயற்சிகள் அனைத்தும் பற்றுகள் அற்றவையாகவே உள்ளன. இந்த செயல்கள் மயக்கம் சூழாதவையாக உள்ளன ( மயக்கம் என்பது என்ன? உடலும் ஆத்மாவும் ஒன்று என்று மயங்காமை; தனது சுற்றும், வீடு முதலானவற்றை உரிமை கொண்டாடி மயங்காமை). நமது ஆத்மாவை ப்ரக்ருதியுடனோ, அதன் குணங்களுடனோ நமது மனம் தொடர்புபடுத்தினால் அதுவே மயக்கமாகும் (ஆத்மாவை ப்ரக்ருதியுடன் தொடர்புபடுத்துதல் = உடலும் ஆத்மாவும் ஒன்று என நினைத்தல்). இந்த மயக்கம் என்பது ஸங்கல்பம் என்ற பதத்தால் (ச்லோகம் காண்க) கூறப்பட்டது. உண்மையான கர்மயோகம் என்பது இப்படிப்பட்ட மயக்கம் அற்றதாகும். இந்த மயக்கம் எப்போது நீங்கும் என்றால் – ஆத்மாவைப் பற்றிய உண்மையான அறிவும், ஆத்மா என்பது ப்ரக்ருதியை விட மாறுபட்டது என்ற அறிவும் ஏற்படும்போது நீங்கும். இந்த உண்மையை அறிந்தவனை, முற்றும் அறிந்தவர்கள் “பண்டிதன்” என்று கூறுகின்றனர். இவனுடைய பழைய கர்மங்கள் அனைத்தும் ஞானம் என்னும் நெருப்பு மூலம் அழிக்கப்படுகின்றன. இந்த ஞானம் என்பது இவனுடைய கர்மங்களால் தோன்றியதும், ஆத்மாவைப் பற்றியதுமே (ஆத்மஞானம் இவன் கர்மங்கள் மூலம் தோன்றும்) ஆகும். இவனே உண்மையான கர்மயோகி ஆவான். இதன் மூலம் கர்மயோகத்தில் ஞானமும் அடக்கம் என்று கூறப்பட்டது.

Advertisements

Comments»

1. Chellammal Bhatta - October 22, 2008

Dear Sir,
Thank you so much for posting the Tamil meanings of the Holy Geeta, chapterwise. It has helped me understand our Holy book. I would like to suggest a downloadable version of it as it is more convenient for those who do not get a frequent access to the Internet, and allows us to read our Geeta more often and more freely.
Thanking you.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: