jump to navigation

79-லக்ஷ்மீ தந்த்ரம் அத் – 4:ச்லோகம்: 43-44-45 March 2, 2008

Posted by sridharan in லக்ஷ்மீ தந்த்ரம்.
trackback
4-43 மஹத்பி: ச்ரவணீய த்வாந்மஹாஸ்ரீ: இதி கத்யதே
         சண்டஸ்ய தயிதா சண்டீ சண்டத்வாத் சண்டிகா மதா

பொருள் – நல்லவர்களின் அடைக்கலமாக நான் உள்ளதால் என்னை மஹாஸ்ரீ என்று அவர்கள் கூறுகின்றனர். சண்டனின் (ருத்ரன்) பத்னியாக உள்ளதால் என்னைச் சண்டி என்றும், கட்டுக்கடங்காமல் உள்ளதால் சண்டிகா என்றும் கூறுகின்றனர்.

குரிப்பு – இங்கு சண்டனின் துணைவி என்பதில் சந்தேகம் எழலாம். இதற்கு ஸ்ரீமத் பகவத் கீதையை நாம் ஆதாரமாக எடுக்கலாம். அங்கு கண்ணன் (10-23) – ருத்ராணாம் சங்கரச்ச அஸ்மி – ருத்ரர்களில் நான் சங்கரன் – என்றான். இவன் இப்படி ருத்ரனின் அந்தர்யாமியாக உள்ளபோது, மஹாலக்ஷ்மி ருத்ரனின் பத்னியின் அந்தர்யாமியாக உள்ளது பொருத்தமே ஆகும்.

4-44 கல்யாணரூபா பத்ராஸ்மி காளீ ச கல்நாத்ஸதாம்
         த்விஷதாம் காலரூபத்வாதபி காளீ ப்ரகீர்த்திதா

பொருள் – அனைத்து மங்கலங்களையும் அளிப்பதால் பத்ரா என்றும், நன்மைகளைக் காப்பதால் காளீ என்றும், விரோதிகளுக்குக் காலனாக உள்ளதால் காளீ என்றும் கூறப்படுகிறேன்.

4-45 ஸுஹ்ருதாம் த்விஷாம் ச ஏவ யுகபத்ஸதஸ்த்விதே:
          பத்ரகாளீ ஸமாக்யாதா மாய ஆச்சர்ய குணாத்மிகா

பொருள் – நண்பர்களுக்கு உபகாரத்தையும், தீயவர்களுக்கு அபகாரத்தையும் செய்வதால் பத்ரகாளீ என்று கூறப்படுகிறேன். எனக்கு உள்ள வியப்பளிக்கும் குணங்கள் காரணமாக நான் மாயா என்றும் அழைக்கப்படுகிறேன்.

Comments»

No comments yet — be the first.

Leave a comment