jump to navigation

லக்ஷ்மீ தந்த்ரம் – அத்யாயம் 9 மற்றும் 10 January 1, 2012

Posted by sridharan in லக்ஷ்மீ தந்த்ரம்.
Tags: , , , , , ,
2 comments

Please click links below:

lakshmi-tantra-chapter9

lakshmi-tantra-chapter10

 

Advertisements

Sri Lakshmi Tantram – Chapters 6, 7 and 8 December 29, 2010

Posted by sridharan in லக்ஷ்மீ தந்த்ரம்.
Tags: , , , , ,
2 comments

Please click links below to download:

lakshmi-tantra-chapter6

lakshmi-tantra-chapter7

lakshmi-tantra-chapter8

 

 

 

 

 

80-லக்ஷ்மீ தந்த்ரம் அத் – 4:ச்லோகம்: 46-47-48 March 3, 2008

Posted by sridharan in லக்ஷ்மீ தந்த்ரம்.
1 comment so far
4-46 மஹத்த்வாச்ச மஹாமாயா மோஹநாந்மோஹிநீ மதா
         துர்க்கா ச துர்க்கமத்வேந பக்தரக்ஷாவிதேரபி

பொருள் – என்னுடைய மாயை எங்கும் பரவுவதாலும் (அல்லது மஹத்வம் எங்கும் உள்ளதாலும்) என்னை மஹாமாயா என்றும், அனைவரையும் மோகத்தில் ஆழ்த்துவதால் மோகினி என்றும், அடைவதற்கு மிகவும் கடினமானவள் என்பதால் துர்க்கை என்றும், பக்தர்களைக் காப்பதால் துர்க்கை என்றும் கூறுகின்றனர்.

4-47 யோஜநாச்ச ஏவ யோகாஹம் யோமாயா ச கீர்த்திதா
          மாயாயோகேதி விஜ்ஞேயா ஞானயோஜநதோ ந்ருணாம்

பொருள் – பரமாத்மாவுடன் ஜீவனை இணைக்கும் பாலமாக நான் உள்ளதால் என்னை யோகா என்றும், யோகமாயா என்றும் கூறுகின்றனர். மேலும் மனிதர்களுக்கும் ஞானத்திற்கும் நான் இணைப்புப் பாலமாக உள்ளதால் என்னை மாயாயோகா என்றும் கூறுகின்றனர்.

4-48 பூர்ண ஷாட்குண்ய ரூபத்வாத் ஸ அஹம் பகவதீ ஸ்ம்ருதா
         பகவத் யஜ்ஞ ஸம்யோகாத் பத்நீ பகவத்: அஸ்மி அஹம்

பொருள் – ஆறு குணங்களும் பூர்ணமாக உள்ளதால் என்னைப் பகவதி என்றும் கூறுகின்றனர். பகவானுடன் அவனது யஜ்ஞங்களில் பங்கு பெறுவதால் என்னை அவனுடைய தர்மபத்னியாகக் கொள்கின்றனர்.

79-லக்ஷ்மீ தந்த்ரம் அத் – 4:ச்லோகம்: 43-44-45 March 2, 2008

Posted by sridharan in லக்ஷ்மீ தந்த்ரம்.
add a comment
4-43 மஹத்பி: ச்ரவணீய த்வாந்மஹாஸ்ரீ: இதி கத்யதே
         சண்டஸ்ய தயிதா சண்டீ சண்டத்வாத் சண்டிகா மதா

பொருள் – நல்லவர்களின் அடைக்கலமாக நான் உள்ளதால் என்னை மஹாஸ்ரீ என்று அவர்கள் கூறுகின்றனர். சண்டனின் (ருத்ரன்) பத்னியாக உள்ளதால் என்னைச் சண்டி என்றும், கட்டுக்கடங்காமல் உள்ளதால் சண்டிகா என்றும் கூறுகின்றனர்.

குரிப்பு – இங்கு சண்டனின் துணைவி என்பதில் சந்தேகம் எழலாம். இதற்கு ஸ்ரீமத் பகவத் கீதையை நாம் ஆதாரமாக எடுக்கலாம். அங்கு கண்ணன் (10-23) – ருத்ராணாம் சங்கரச்ச அஸ்மி – ருத்ரர்களில் நான் சங்கரன் – என்றான். இவன் இப்படி ருத்ரனின் அந்தர்யாமியாக உள்ளபோது, மஹாலக்ஷ்மி ருத்ரனின் பத்னியின் அந்தர்யாமியாக உள்ளது பொருத்தமே ஆகும்.

4-44 கல்யாணரூபா பத்ராஸ்மி காளீ ச கல்நாத்ஸதாம்
         த்விஷதாம் காலரூபத்வாதபி காளீ ப்ரகீர்த்திதா

பொருள் – அனைத்து மங்கலங்களையும் அளிப்பதால் பத்ரா என்றும், நன்மைகளைக் காப்பதால் காளீ என்றும், விரோதிகளுக்குக் காலனாக உள்ளதால் காளீ என்றும் கூறப்படுகிறேன்.

4-45 ஸுஹ்ருதாம் த்விஷாம் ச ஏவ யுகபத்ஸதஸ்த்விதே:
          பத்ரகாளீ ஸமாக்யாதா மாய ஆச்சர்ய குணாத்மிகா

பொருள் – நண்பர்களுக்கு உபகாரத்தையும், தீயவர்களுக்கு அபகாரத்தையும் செய்வதால் பத்ரகாளீ என்று கூறப்படுகிறேன். எனக்கு உள்ள வியப்பளிக்கும் குணங்கள் காரணமாக நான் மாயா என்றும் அழைக்கப்படுகிறேன்.

78-லக்ஷ்மீ தந்த்ரம் அத் – 4:ச்லோகம்: 40-41-42 March 1, 2008

Posted by sridharan in லக்ஷ்மீ தந்த்ரம்.
add a comment
4-40 பத்ரகாளீ ததா பத்ரா காளீ துர்க்கா மஹேச்வரீ
         த்ரிகுணா பகவத்பத்நீ ததா பகவதீ பரா

பொருள் – மேலும் என்னைப் பத்ரகாளீ, பத்ரா, காளீ, துர்க்கை, மஹேச்வரி, த்ரிகுணா என்று பலவாறு அழைக்கின்றனர். பகவானின் பத்தினியாக நான் உள்ளதால் என்னைப் பகவதி என்றும் அழைக்கின்றனர்.

4-41 ஏதா: ஸஜ்ஞாஸ்ததா சாந்யாஸ்தத்ர மே பஹுதா ஸ்ம்ருதா:
         விகாரயோகாதந்யாச்ச தாஸ்தா வக்ஷ்யாம் யசேஷத:

பொருள் – நான் எனது மூல நிலையை வெவ்வேறு விதமாக வெளிப்படுத்தும்போது பல திருநாமங்களால் அழைக்கப்படுகிறேன். மேலே உள்ளவை (கடந்த இரு ச்லோகங்கள்) அவற்றில் சில திருநாமங்கள் ஆகும். அவற்றை நான் இப்போது விரிவாகக் கூறுகிறேன்.

4-42 லக்ஷயாமி ஜகத் ஸர்வம் புண்யாபுண்யே க்ருதாக்ருதே
         மஹநீயா ச ஸர்வத்ர மஹாலக்ஷ்மீ: ப்ரகீர்த்திதா

பொருள் – இந்த உலகில் உள்ள புண்ய பாவங்களையும், சுப அசுப செயல்களையும் நான் ஆதரித்தபடியும் விலக்கியபடியும் உள்ளேன். இதனால் அனைவராலும் பெரிதாக மதித்துப் போற்றப்படுகிறேன். இதன் காரணமாக உலகத்தினர் என்னை மஹாலக்ஷ்மி என்று கூறுகின்றனர்.

77-லக்ஷ்மீ தந்த்ரம் அத் – 4:ச்லோகம்: 37-38-39 February 29, 2008

Posted by sridharan in லக்ஷ்மீ தந்த்ரம்.
add a comment
4-37 அக்நீஷோ மமயௌ பாவௌ திவ்யௌ ஸ்த்ரி பும்ஸ லக்ஷணௌ
         விப்ரதீ சாரு ஸர்வாங்கீ லோகாநாம் ஹிதகாம்யயா

பொருள் – இந்த உலகின் நன்மையை நான் கருத்தில் கொண்டு, ஆண் – பெண் என்ற இரண்டு ரூபங்களில் வெளிப்படவேண்டும் என்ற ஆவலால், அழகான அக்னி மற்றும் சோமனாக நான் வெளிப்படுகிறேன்.

4-38 சதுர்புஜா விசாலாக்ஷி தப்தகாஞ்சந ஸந்நிபா
         மாதுலிங்கம் கதாம் கேடம் ஸிதாபாத்ரம் ச பிபந்நதி

பொருள் – எனது தோற்றம் என்பது நான்கு திருக்கரங்கள், அழகாக விரிந்த கண்கள், தங்கம் போன்று மின்னும் திருமேனி நிறம், திருக்கரங்களில் – நார்த்தங்காய் (அல்லது மாதுளம்பழம்), கதை, கேடயம், அம்ருத கலசம் – இப்படியாக உள்ளது.

4-39 மஹாலக்ஷ்மீ: ஸமாக்யாதா ஸாஹம் ஸர்வாங்க ஸுந்தரீ
          மஹாஸ்ரீ: ஸா மஹாலக்ஷ்மீ: சண்டா சண்டீ ச சண்டிகா

பொருள் – மிகவும் அழகான தோற்றத்துடன், அனைத்து அங்கங்களும் நேர்த்தியாக உள்ள என்னை- மஹாலக்ஷ்மீ, மஹாஸ்ரீ, சண்டா, சண்டீ, சண்டிகா – என்று கூறுகின்றனர்.

குறிப்பு – இந்த ச்லோகத்திலும், அடுத்து வரும் பல ச்லோகங்களிளும் மஹாலக்ஷ்மி தன்னைப் பல தெய்வங்களாகக் கூறிக் கொள்வதைக் காணலாம். இதனை வைத்துக் கொண்டு அந்தத் தேவதைகளும் மஹாலக்ஷ்மியும் ஒன்று என முடிவு செய்தல் கூடாது. ஸ்ரீமத் பகவத் கீதையில் 10-வது அத்யாயத்தில் கண்ணன் தன்னை ருத்ரன் என்றும், குபேரன் என்றும், அக்னி என்றும் பல விதமாகக் கூறுவதை ஒப்பு நோக்க வேண்டும். அங்கு உள்ளது போன்றே இங்கும் இந்தத் தேவதைகளின் அந்தர்யாமியாகத் தான் உள்ளதாக மஹாலக்ஷ்மி கூறுகிறாள் என்று தெளிய வேண்டும்.

76-லக்ஷ்மீ தந்த்ரம் அத் – 4:ச்லோகம்: 34-35-36 February 28, 2008

Posted by sridharan in லக்ஷ்மீ தந்த்ரம்.
add a comment
4- 34 ப்ராதாந்யேந ரஜஸ்தத்ர ஸ்ருஷ்டௌ ஸம்பரிவர்த்ததே
          அபித: ஸத்த்வதமஸீ குணௌ த்வௌ தஸ்ய திஷ்டத:

பொருள் – ஸ்ருஷ்டியின் தொடக்கத்தில் ரஜோ குணமே வெளிப்பட்டபடி உள்ளது. இதற்கு உதவியாக, அதன் பின்னர் ஸத்வ குணமும், தமோ குணமும் வெளிப்படுகின்றன.

4-35 யா ஸா பூர்வம் மயா ப்ரோக்தா கோடிகோடிதமீகலா
          தஸ்யா: கோடிதமே நாஹமம்சேந விஸ்ருஜே ஜகத்

பொருள் – நான் முன்பே கூறியபடி எனது கோடியில் கோடியில் ஒரு பகுதி, அந்தப் பகுதியில் கோடியில் கோடியில் ஒரு பகுதி – அதனைக் கொண்டு மட்டுமே இவை அனைத்தையும் நான் ஸ்ருஷ்டிக்கிறேன்.

4-36 ஸர்வஸ்யாத்யா மஹாலக்ஷ்மீ: த்ரிருணாஹம் மஹேச்வரீ
          ரஜோரூபம் அதிஷ்டயா ஸ்ருஷ்டிம் இஷ்டாம் கரோமி அஹம்

பொருள் – ஸ்ருஷ்டியின் தொடக்கத்தில், மூன்று குணங்களும் நிரம்பிய மஹேச்வரி எனப்படும் மஹாலக்ஷ்மியாகிய நான், எனது ரஜோ குணத்தில் ஈடுபட்டு நின்று, அனைத்தையும் ஸ்ருஷ்டி செய்யத் தொடங்குகிறேன்.

75-லக்ஷ்மீ தந்த்ரம் அத் – 4:ச்லோகம்: 31-32-33 February 27, 2008

Posted by sridharan in லக்ஷ்மீ தந்த்ரம்.
add a comment
4-31 தேவர்ஷி பித்ரு ஸித்தாத்யை: ஸ்வயம் வா ஜகதாம் ஹேதே
          நிர்மிதம் பகவத்ரூபம் அர்ச்சா ஸா சுத்தசிந்மயி

பொருள் – அத்தகைய பகவானின் ரூபங்கள் ரிஷிகளாலும், பித்ருக்களாலும், தேவர்களாலும், சித்தர்களாலும் இந்த உலகின் நன்மைக்காக ஆராதிக்கப்பட்டு வருகின்றன. இவை அர்ச்சா விக்ரஹங்கள்ஆகும். இவை சுத்தஸத்வம் என்று கொள்ளப்பட வேண்டும் (இந்த விக்ரஹங்கள் தோஷம் அடையாதவை என்று கருத்து).

4-32 இத்யேஷ லேசதோ மார்க்க: சுத்தஸ்தே ஸம்ப்ரதர்சித:
          த்ரைகுண்யம் அபரம் மார்க்கம் கதந்த்யா மே நிசாமய

பொருள் – இப்படியாக சுத்தஸ்ருஷ்டி மார்க்கம் குறித்து இதுவரை நான் கூறினேன். இப்போது மூன்று குணங்களுடன் கூடிய ஸ்ருஷ்டிகள் குறித்துக் கூறக் கேட்பாயாக.

4-33 யத்தே ஞானம் புரா ப்ரோக்தம் தத்ஸத்த்வேந விவர்த்ததே
          ரஜஸ்தயா தத் ஐச்வர்ய சக்திச்ச அபி தமஸ்தயா

பொருள் – எனது ஞானம் என்பது ஸத்வ குணமாகவும், ஐச்வர்யம் என்பது ரஜோ குணமாகவும், சக்தி என்பது தாமஸ குணமாகவும் தோன்றுகின்றன.

74-லக்ஷ்மீ தந்த்ரம் அத் – 4:ச்லோகம்: 28-29-30 February 26, 2008

Posted by sridharan in லக்ஷ்மீ தந்த்ரம்.
add a comment
4-28 ஏதத் த்வ வ்யூஹாந்தரம் நாம பஞ்சராத்ராபி சப்திதம்
         கார்யஸ்ய நயேந தேவா த்வாதச ஏதே வ்யவஸ்திதா:

பொருள் – இந்தப் பன்னிரண்டும் வ்யூஹாந்தரங்கள் எனப் பாஞ்சராத்ர ஆகமத்தால் கூறப்படுகின்றன. இவர்கள் அனைவரும் ஸ்ருஷ்டி முதலான செயல்களில் ஈடுபட்டபடி உள்ளனர்.

4-29 விபோ: அபி அநிருத்தஸ்ய ஹிதாய ஜகதாம் ஹரே:
         ப்ரஸரோ விபவோ நாம பத்மநாபாதய: ஸ்ம்ருதா:

பொருள் – பத்மநாபன் முதலான விபவ ரூபங்கள் ஸ்ரீஹரியின் அநிருத்தன் போன்ற ரூபங்களே ஆகும். இவற்றை இவன் ஏன் எடுக்கிறான்? இவன் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளபோதும், இந்த உலகின் நன்மைக்காக, இது போன்று ரூபங்களில் மட்டுமே உள்ளதாகக் காணபித்துக் கொள்கிறான்.

4-30 ஆவிச்யாவிச்ய குருதே யத்ர தேவநராதிகம்
          ஜகத் இதம் ஜகந்நாதஸ்தஜ்ஞேயம் விபவாந்தரம்

பொருள் – இந்த உலகின் பதியான ஜகந்நாதன் – இந்த உலகின் நன்மையைக் கருத்தில் கொண்டு, அவ்வப்போது மனிதனாகவோ தேவனாகவோ அவதரித்தபடி உள்ளான். இவை அனைத்தும் பல்வேறு விபவ அவதாரங்கள் ஆகின்றன.

73-லக்ஷ்மீ தந்த்ரம் அத் – 4:ச்லோகம்: 25-26-27 February 25, 2008

Posted by sridharan in லக்ஷ்மீ தந்த்ரம்.
add a comment
4-25 வஸ்து பூர்வம் ததோ பாவ: பச்சாதர்த்தஸ்தத: க்ரியா
         சாதூரூப்யம் இதம் ஜ்ஞேயம் ஸர்வபாவேஷு ஸர்வதா

பொருள் – முதலில் ஒரு பொருள் தோன்றுகிறது. அதன் பின்னர் அந்தப் பொருள், “இருக்கிறது” என்னும் நிலையை அடைகிறது. அதன் பின்னர் அந்தப் பொருளின் செயல்பாடு உருவாக்கப்பட்டு, செயல்பாட்டையும் அடைகிறது. இப்படியாகப் படைக்கப்படும் எந்த ஒரு பொருளும் தொடர்ச்சியாக நான்கு நிலைகளைக் கடக்கின்றன.

4-26. வாஸுதேவாதிரூபேண சதுர்த்தாத்ம அனமாத்மநா
ஸம்விபஜ்யாவதிஷ்டே அஹம் ஸர்வம் ஆவ்ருத்ய ஸம்விதா

பொருள் – எனது இச்சை காரணமாக நான் வாஸுதேவன் முதலான நான்கு ரூபங்களாகப் பரிணமிக்கிறேன். இந்த நான்கு வ்யூஹங்களிலும் எனது ஞானத்தை எப்போதும் செலுத்தியபடியே உள்ளேன்.

4-27 வாஸுதேவாதயோ தேவா: ப்ரத்யேகம் து த்ரிதா த்ரிதா
கேசவாதி ஸ்வரூபேண விபஜந்தி ஸ்வகம் வபு:

பொருள் – வாஸுதேவன் முதலான நான்கு வ்யூஹங்கள் தங்களை மூன்று வ்யூஹாந்தரமாகப் பிரித்துக் கொள்கின்றனர். இவையே கேசவன் முதலான பன்னிரண்டாகும்.

விளக்கம் – கேசவன், மாதவன் முதலிய பன்னிரண்டு திருநாமங்கள் இங்கு கூறப்படுகின்றன. இவை வ்யூஹாந்தரங்கள் ஆகும். வாஸுதேவன் முதலான ஒவ்வொரு வ்யூஹமும் மூன்று மூன்றாகப் பிரிந்து, இந்தப் பன்னிரண்டு வ்யூஹாந்தரங்கள் ஆகின்றன.