jump to navigation

பேசும் வைணவம் – 1 July 17, 2008

Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.
trackback

அடியேனின் ஆத்மநண்பரான ஸ்ரீமாந் முரளிபட்டர் ஸ்வாமி, அவருடைய இணையதளமான http://www.srirangapankajam.com என்பதில் திருவரங்கச்செல்வனைக் குறித்து ”பேசும் அரங்கன்” என்னும் தலைப்பில் தொடர் எழுதி வருவதைப் பலரும் அறிவீர்கள்.

அந்த ஸ்வாமியினுடைய தலைப்பை அடியொட்டி, அடியேன் “பேசும் வைணவம்” என்ற தலைப்பில் ஒரு தொடர் எழுத முனைந்துள்ளேன். இந்தத் தொடரில் வைணவத்தைப் பற்றிய அடிப்படையான கருத்துக்கள் இடம் பெறும். உதாரணமாக – ப்ரக்ருதி என்றால் என்ன, அஹங்காரம் என்றால் என்ன, மஹத் என்றால் என்ன போன்ற அடிப்படையான விஷயங்கள் விளக்கப்பட உள்ளன. அடியேனின் இந்த முயற்சிக்கு வைணவ அஸ்திவாரமாக விளங்கும் ஸ்வாமி எம்பெருமானார் பக்கபலமாக நிற்பார் என்பதில் ஐயம் இல்லை.

இந்தப் பகுதியைப் படிக்கும் பாகவதோத்தமர்கள் தங்கள் கேள்விகளையும், மற்றவர்கள் கேள்விகளுக்கு பதில்களையும் எழுத முன்வரலாம் என்று வேண்டுகிறேன்.

அடியேன் தாஸன்

க. ஸ்ரீதரன்

சாஸ்த்ரம் என்றால் என்ன?

“இதனைச் செய், அதனைச் செய், இதனைச் செய்யாதே, அதனைச் செய்யாதே” என்று எந்த ஒன்று நமக்குக் கட்டளையிடுகிறதோ, இவற்றால் வரக்கூடிய நன்மை-தீமைகளை நமக்கு உபதேசிக்கிறதோ அதுவே சாஸ்த்ரம் எனப்படும்.

Comments»

1. ramanujadasan - March 18, 2009

namasthe.it is so sweet and easy to understand


Leave a comment